பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு.!

இடைநிலை ஆசிரியர்களுக்கு பணபலன்களை வழங்காத விவகாரம் தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  உயர்நீதிமன்ற குழுவானது தமிழகத்தில் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் 1993 அரசாணை படி, பணபலங்களை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. ஆனால், தற்போது வரையில் அரசாணைப்படி பணபலன்கள் ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படவில்லை. இதனால், ஆசிரியர் ஹரிஹரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, பல முறை பள்ளிக்கல்வித்துறையிடம் விளக்கம் கேட்டுள்ளது. … Read more

தமிழக வனப்பகுதிகளில் பரவிய அன்னிய மரங்கள்… வனத்துறைக்கு அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்.! 

தமிழக வனப்பகுதியில் இருக்கும் அன்னிய மரங்களை அகற்ற வேண்டும் எனவும், அதனை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் எனவும் தமிழக வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழக வனப்பகுதிகளில் அன்னிய மரங்கள் அதிகமாக இருப்பதாக கூறி, அதனை அகற்றவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி அமர்வு முன்பு வந்த போது, இதனை விசாரித்த நீதிபதி அமர்வு, ‘ உடனடியாக தமிழகவனப்பகுதியில் ஆக்கிரமித்துள்ள அன்னிய மரங்களை அகற்ற … Read more

கலப்பு திருமண சான்றிதழ் விவகாரம்.! பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

கலப்பு திருமண சான்றிதழை சமர்பிக்கவில்லை என்பதற்காக பணி நியமன ஆணையை வழங்க தாமதிக்க கூடாது என ஓர் வழக்கில் பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.  சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பள்ளிக்கல்வித்துறைக்கு ஓர் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இளங்கோ என்பவர் தனக்கு பணி நியாமன ஆணை இன்னும் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டு வழக்கு தொடர்ந்து இருந்தார். அவர் கலப்பு திருமணம் செய்து இருந்துள்ளார் . அதன் சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை என கூறி அவருக்கான பணி நியமனம் தாமதிக்கப்பட்டதாக தெரிகிறது. … Read more

சென்னை உயர்நீதிமன்றதிற்கு புதிய தலைமை நீதிபதி முரளிதர்.!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முரளிதர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது ஒடிசா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.    சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தற்போது நீதிபதி முரளிதர் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக நீதிபதி துரைசாமி பதவி வகித்தார். அவருடைய பதவிக்காலம் அண்மையில் நிறைவு பெற்றதை அடுத்து அந்த இடத்திற்கு புதிய நீதிபதியாக தற்போது முரளிதர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை ஏற்கனவே உச்சநீதிமான்ற கொலிஜியம் பரிந்துரைத்த நிலையில், … Read more

அனுமதி பெறாமல் செயல்பட்ட ஈஷா யோகா மையம்.? சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்.! 

கோவை ஈஷா யோகா மையம் கல்வி நோக்கத்திற்காக கட்டப்பட்டுள்ளதால் சுற்றுசூழல் அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.  கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையம் சுற்றுசூழல் அனுமதி பெறாமல் கட்டடம் கட்டி இருப்பதாக தமிழக அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈஷா யோகா மையம் முறையீடு செய்தது இந்த வழக்கு விசாரணையானது, நீதிபதி டி.ராஜா தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு … Read more

நீர்வளத்தை காக்க சூப்பர் உத்தரவு.! மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆர்டர் போட்ட உயர்நீதிமன்றம்.!

தமிழகத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் பல்வேறு நீர்நிலைக்கு ஒட்டிய இடங்களில் வளர்ந்து நிற்கும் மரங்கள் கருவேலை மரங்கள். இந்த மரங்கள் நிலத்தில் உள்ள நீரை உறிஞ்சி நீர்வளத்தை குறைக்கும் தன்மை கொண்டது. இதனை தடுக்க அரசும், தன்னார்வ அமைப்புகளும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளில் அவ்வப்போது ஈடுபடும். நீர் ஆதாரத்தை பாதிக்கும் சீமை கருவேல மரங்களை அகற்ற சென்னை உய்ரநீதிமன்றம் … Read more

ஜெயலலிதாவின் உயிலை வெளியிட உண்ணாவிரதம்.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிலை வெளியிட கோரி,  உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.  மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்து வந்த ஜெயலிலதா, டிசம்பர் 5ஆம் தேதி 2016ஆம் தேதி உயிரிழந்தார். அவர் இறப்புக்கு பல்வேறு சர்ச்சைகள் அந்த சமயம் எழுந்தன. சென்னை, மாங்காடு பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரான சவுந்தரராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ‘ … Read more

குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் : அரசின் உத்தரவு செல்லும்.!

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவராக இருந்த சரஸ்வதி அவர்களின் பதவியை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவு செல்லும் என மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவராக சரஸ்வதி பதவி வகித்து வந்தார். இந்த பதவியை  தமிழக அரசு ரத்து செய்து இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவராக சரஸ்வதி  மற்றும் சிலர் பதவியை ரத்து செய்து தமிழக அரசு … Read more

தேதி-நேரம் குறிப்பிட்ட சம்மன் முக்கியம்… போலிஸ் விசாரணைக்கு கிடுக்குபிடி உத்தரவு.! உயர்நீதிமன்றம் அதிரடி.!

போலீஸ் விசாரணைக்கு அழைக்க சம்பந்தப்பட்டவரிடம், அதிகாரிகள் எழுத்துபூர்வமான சம்மனை அளிக்க வேண்டும். அதில் தேதி, நேரம் குறிப்பிட்டு இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  போலீஸ் விசரணைக்கு தன்னை அடிக்கடி அழைப்பதாகவும், நேரம் காலம் இல்லாமல் விசாரணை நடைபெறுவதாவும் திருப்பூரை சேர்ந்த பிரகாஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை வந்த போது, அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், சம்பந்தப்பட்டவர் வழக்கில் தொடர்புடைய காரணமாக தான் விசாரணைக்கு அழைக்கப்படுகிறார் என … Read more

சொத்து விவரங்களை தாக்கல் செய்ய விஷாலுக்கு 2 வாரங்கள் அவகாசம் – சென்னை உயர்நீதிமன்றம.!

விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தயாரிப்புக்காக, 21 கோடியே 29 லட்சம் ரூபாயை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து கடனாக பெற்றிருந்தது. பிறகு, இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தங்களுக்கு கொடுக்கவேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை வழங்காமல், … Read more