தமிழக வனப்பகுதிகளில் பரவிய அன்னிய மரங்கள்… வனத்துறைக்கு அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்.! 

தமிழக வனப்பகுதியில் இருக்கும் அன்னிய மரங்களை அகற்ற வேண்டும் எனவும், அதனை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் எனவும் தமிழக வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழக வனப்பகுதிகளில் அன்னிய மரங்கள் அதிகமாக இருப்பதாக கூறி, அதனை அகற்றவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி அமர்வு முன்பு வந்த போது, இதனை விசாரித்த நீதிபதி அமர்வு, ‘ உடனடியாக தமிழகவனப்பகுதியில் ஆக்கிரமித்துள்ள அன்னிய மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என வனத்துறைக்கு உத்தரவிட்டது.

மேலும், ‘ அன்னிய மரங்களை அகற்றுவதை கண்காணிக்க தனி குழு ஒன்றை அமைக்க வேண்டும் ‘ எனவும் தமிழக வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment