பத்திரப்பதிவுத்துறையில் ஊழலை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது-உயர்நீதிமன்றம் கேள்வி?

பத்திரப்பதிவுத்துறையில் ஊழலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாட்டு அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கோபாலகிருஷ்ணன் சார் பதிவாளராக பணியாற்றினார். அப்போது சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையில் சோதனை நடத்தியுள்ளனர். அங்கு 70 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் இருந்துள்ளதால் அதை பறிமுதல் செய்து, சார்பதிவாளராக இருந்த கோபாலகிருஷ்ணனை தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்துள்ளனர். தற்போது இவர் மீண்டும் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதனால் … Read more

மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறை வசதிகள் இல்லாமல் அரசு கட்டிடங்கள் கட்டக் கூடாது- சென்னை உயர் நீதிமன்றம்!

தமிழகத்தில் உள்ள அரசு கட்டிடங்கள் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் உள்ளதா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகள் இன்றி அரசு கட்டிடங்கள் கட்ட கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநிலம் முழுதும் உள்ள அரசு கட்டிடங்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் உள்ளதா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், அடுத்த இரண்டு மாதங்களில் இது குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக … Read more

நீட் ஆய்வுக்குழுவுக்கு எதிரான வழக்கு- இடையீட்டு மனுத்தாக்கல்..!

நீட் பாதிப்பு குறித்த ஆய்வுக் குழுவை எதிர்த்த பாஜக நிர்வாகி கரு. நாகராஜன் தொடர்ந்த வழக்கில் இடையீட்டு மனு தாக்கல். தமிழகத்தில் நீட் தேர்வால் ஏழை மற்றும் கிராம புற மாணவர்கள் பாதிக்கப்படுவதையடுத்து, நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், 9 பேர் அடங்கிய குழுவை ஜூன் 10-ம் தேதி அமைத்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. நீட் தேர்வுக்கு பாதிப்பை ஆராய அமைக்கப்பட்ட … Read more

தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு …!

தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிய நிலையில் அதனைக் கட்டுப்படுத்த சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அரங்கத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பூசி முகாமை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி … Read more

சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து வழக்கு…!

சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.எல்.ரவி வழக்கு. கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் இந்த சட்டமன்ற தேர்தலில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் போட்டியிட்டார். உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து பாமக வேட்பாளர் கசாலி போட்டியிட்டார். இதனையடுத்து, உதயநிதி ஸ்டாலின் பாமக வேட்பாளர்களை விட 69 ஆயிரத்து … Read more

3 வது அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்..!

3 வது அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்தது குறித்து பத்திரிக்கைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில்,சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி,நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோரின் முதன்மை அமர்வு,பத்திரிக்கைகளில் வந்த செய்திகளை வழக்காக எடுத்துக்கொண்டு தாமாக முன்வந்து அதனை விசாரித்தது. இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜர் ஆகி வாதிட்டனர். அப்போது,இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறை,வெண்டிலேட்டர் வசதி,தடுப்பூசி குறித்த சில … Read more

கைதிகளுடன் பேச அனுமதி- தமிழக அரசு பதில் தர உத்தரவு..!

கைதிகளுடன் பேச அனுமதி வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசு மற்றும் சிறைத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில்,கொரோனா பரவல் காரணமாக சிறைக்கைதிகளுடன் தொலைபேசி அல்லது காணொளி மூலம் வழக்கறிஞர்கள் பேச அனுமதி வழங்க கோரி கே. ஆர் ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில்,இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் சிறைத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

தெரு விலங்குகளுக்கு உணவு கிடைக்க திட்டம் வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவு..!

தெரு விலங்குகளுக்கு உணவு கிடைப்பதற்கான திட்டத்தை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தில் தெரு ஓரங்களில் கைவிடப்பட்ட விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தேவை குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சிவா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தெரு நாய்களுக்கு உணவளிக்க ஆளுநர் ரூ.10 லட்சம், தமிழக அரசு 9 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வழங்கியதற்கு … Read more

#Breaking:கிராம பஞ்சாயத்து அலுவலக வளாகங்களில் சிசிடிவி கேமரா – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…!

தமிழகம் முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துகளில்  பட்டியலினத்தவர் தலைவராக உள்ள அலுவலக வளாகங்களில் சாதிய ரீதியிலான குற்றங்களை கட்டுப்படுத்த, சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிட கோரிய மனுவிற்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பட்டியலினத்தவர் தலைவராக உள்ள கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில்,சிசிடிவி பொருத்தக்கோரி வழக்கறிஞர் ராஜகுரு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதாவது,தமிழ்நாட்டில் உள்ள பஞ்சாயத்துகளில் 1997 ஆம் ஆண்டு முதல் 6  பட்டியலின தலைவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.மேலும், … Read more

“அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த நிபுணர் குழு” – உயர்நீதிமன்றம் உத்தரவு..!

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தவும், பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் நிபுணர் குழு அமைக்க வேண்டும். தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சம்பள விகிதம் நிர்ணயிப்பதில்,தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் பணிக் காலத்தையும் சேர்த்துக்கொள்ளக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து,இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகக் கல்வித்துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் … Read more