ஆப்கான் விவகாரம் – வரும் 26ம் தேதி நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!

ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்த வரும் வியாழக்கிழமை நாடாளுமன்ற அனைத்துக்கட்சி நடைபெறும் என்று அறிவிப்பு. ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து விளக்கமளிக்க வரும் வியாழக்கிழமை (26ம் தேதி) நாடாளுமன்ற அனைத்துக்கட்சி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆலோசனையில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளிக்கிறார். ஆப்கானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம் அளிக்கிறது மத்திய அரசு.

#BREAKING: மாநில மொழியில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு – உயர்நீதிமன்றம் கிளை

இந்திய அலுவல் மொழிச்சட்டத்தை மத்திய அரசு, அதன் அலுவலர்கள் பின்பற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. ஒரு மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அந்த மொழியில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தனது கடிதத்திற்கு மத்திய அரசு இந்தியில் பதிலளித்துள்ளதாக கூறி மதுரை எம்பி சு.வெங்கடேசன் தொடர்ந்த வழக்கில் அணையிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் இந்திய அலுவல் மொழிச்சட்டத்தை மத்திய அரசு, அதன் அலுவலர்கள் பின்பற்ற … Read more

மக்களின் தலை மீது சுமையை ஏற்றும் பாஜக அரசின் கொடுஞ்செயலுக்கு கடும் கண்டனம் – சீமான்

எரிகாற்று உருளையின் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவது நாட்டு மக்கள் தலையில் விழுந்த பேரிடி என சீமான் கண்டனம். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய்த்தொற்றால் மக்கள் நிற்கதியற்று, நிற்கையில் அவர்களது வாழ்வாதாரத்துக்கு எதுவுமே செய்யாத ஒன்றிய பாஜக அரசு, எரிக்காற்று உருளையின் விலை ரூ.875 ஆக உயர்த்திருப்பது மக்களிடம் பெரும் கொதிப்பினை ஏற்படுத்தியிருக்கிறது. பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் நாட்டு மக்கள் பெருந்துயருக்கு ஆளாகி, அன்றாட செலவினங்களையே … Read more

ஆப்கான் விவகாரம் – மத்திய அரசு முக்கிய ஆலோசனை!!

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை குழு ஆலோசனை நடத்த உள்ளது.  ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்பது மற்றும் அந்நாட்டு நிலவரம் தொடர்பாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு இன்று  ஆலோசனை நடத்த உள்ளது. ஆப்கானிஸ்தானில் மேலும் 1,500 இந்தியர்கள் சிக்கியுள்ளதாக வெளியுறவுதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் … Read more

மதுரை எய்ம்ஸ் பணிகள் எப்போது தொடங்கும்? – மத்திய அரசு பதில்!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று தெரியாது என மத்திய அரசு தெரிவித்தாக தகவல். மதுரை தோப்பூரில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது. மருத்துவமனை கட்டுவதற்காக முதல்கட்டமாக கணிசமான தொகையை வழங்குவதாக ஜப்பான் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. தற்போது அந்த மருத்துவமனையின் திட்ட அதிகாரிகள் நியமன பணிகள் நடக்கின்றன. இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று தெரியாது என தெரிவித்தாக மத்திய அரசு தகவல் … Read more

ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் பட்டியலை அளிக்க வேண்டும் – மத்திய அரசு

ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்கள் பற்றிய விவரங்களை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அளிக்க வேண்டும் என மத்திய அரசு கடிதம். ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் பட்டியலை அளிக்க வேண்டும் என்று மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. மாநில அரசுகளிடம் இருந்து வரும் தகவல்களை திரட்டி, நாடாளுமன்ற அவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை என்று மத்திய … Read more

மத்திய அரசு தொடர்ந்து மாநில மொழிகளை புறக்கணிக்கிறது – திமுக எம்பி திருச்சி சிவா

மாநில மொழிகளை மட்டும் அல்லாமல் ஆங்கிலத்தையும் அகற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என திமுக எம்பி திருச்சி சிவா குற்றசாட்டு. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, மத்திய அரசு தொடர்ந்து மாநில மொழிகளை புறக்கணிக்கிறது. மாநில மொழிகளை மட்டும் அல்லாமல் ஆங்கிலத்தையும் அகற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக குற்றசாட்டியுள்ளார். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி மத்திய அரசு இந்தியில் மட்டும் அறிக்கை வெளியிட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை உளவு பார்ப்பது மத்திய அரசா? பெகாசஸ் தொழிநுட்பமா? – வெளியான அதிர்ச்சி தகவல்!!

உளவு பார்க்கப்பட்ட தொலைபேசி எண்களின் பட்டியலில் ராகுல் காந்தி முன்பு பயன்படுத்திய இரண்டு எண்களும் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. PEGASUS சாப்ட்வேர் மூலம் உளவு : இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் PEGASUS சாப்ட்வேர் மூலம் பல்வேறு நாடுகளின் முக்கிய நபர்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் என பலரின் செல்போன் உரையாடல்கள், படங்கள், வீடியோக்கள் உளவு பார்க்கப்பட்டதாக சமீபத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உளவு பார்க்கப்பட்ட பெயர் பட்டியல் : இதனைக்குறித்து ஆய்வு மேற்கொண்டதில், PEGASUS சாப்ட்வேர் … Read more

65 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம்!!

வரும் டிசம்பர் மாதம் வரை 65.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம். டிசம்பர் மாதம் வரை சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் இருந்து 65.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை பெற மத்திய அரசு ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது. கொள்முதல் செய்யும் தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு வழங்க மத்திய முடிவு செய்து இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் சீரம் நிறுவனத்திடம் 37 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளும், பாரத் பயோடெக்கிடம் 28.8 … Read more

மத்திய அரசு சார்பில் 18ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் – விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி!

வரும் 18ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி.  நாடாளுமன்ற கூட்டத்தொடரையொட்டி வரும் 18ம் தேதி அனைத்துக்கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. 18ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பங்கேற்க இருக்கின்றனர். இதனிடையே, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எப்படி செயல்படுவது என்பது … Read more