தனக்கு குடியுரிமை வழங்காவிட்டால் கருணை கொலை செய்துவிடுங்கள்.! இலங்கை தமிழ் இளைஞர் கோரிக்கை.!

இந்திய குடியுரிமை வழங்காவிட்டால் கருணை கொலை செய்து விடுங்கள் என சேலம் மாவட்ட ஆட்சியரிடம் இலங்கை தமிழ் இளைஞர் மனு அளித்துள்ளார். இந்திய குடியுரிமை சட்டத்தில் இலங்கை தமிழர்கள் சேர்க்கப்படவில்லை என தமிழ் அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பில் அவர் தெரிவித்திருப்பது, 25 ஆண்டுகளுக்கு மேலாக சேலத்தில் வசித்து வருகிறேன். தற்போது குடியுரிமை சட்டத்திருத்தத்தால் எனக்கு இந்திய குடியுரிமை வழங்காவிட்டால் கருணை கொலை செய்து விடுங்கள். எனது தாய், தந்தை இலங்கையில் … Read more

பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் தொடக்கம்

குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில்  தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பாஜக எம்பிக்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா … Read more

மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்..!

மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 311 எம்.பிக்களும், எதிராக 80 எம்.பிக்களும் வாக்களித்தனர். இதை தொடர்ந்து மக்களவையில் குடியுரிமை  சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.  ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியோருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க வகையில் குடியுரிமை  சட்டத் திருத்த மசோதாவை நேற்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா  தாக்கல் செய்தார். இம்மசோதாவை அறிமுகப்படுத்ததுவதா.? வேண்டாமா .? என வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் அதிமுக எம்.பிக்கள் உள்ளிட்ட 295 எம்பிக்கள் … Read more