தனக்கு குடியுரிமை வழங்காவிட்டால் கருணை கொலை செய்துவிடுங்கள்.! இலங்கை தமிழ் இளைஞர் கோரிக்கை.!

  • இந்திய குடியுரிமை வழங்காவிட்டால் கருணை கொலை செய்து விடுங்கள் என சேலம் மாவட்ட ஆட்சியரிடம் இலங்கை தமிழ் இளைஞர் மனு அளித்துள்ளார்.
  • இந்திய குடியுரிமை சட்டத்தில் இலங்கை தமிழர்கள் சேர்க்கப்படவில்லை என தமிழ் அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பில் அவர் தெரிவித்திருப்பது, 25 ஆண்டுகளுக்கு மேலாக சேலத்தில் வசித்து வருகிறேன். தற்போது குடியுரிமை சட்டத்திருத்தத்தால் எனக்கு இந்திய குடியுரிமை வழங்காவிட்டால் கருணை கொலை செய்து விடுங்கள். எனது தாய், தந்தை இலங்கையில் இனப்போர் நடந்ததால் கடந்த 1990-ம் ஆண்டு இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வந்துவிட்டனர். அது முதல் சேலம் மாவட்டம் பவளத்தானூர் அகதிகள் முகாமில் இருந்து வருகிறோம். நான் 1991-ம் ஆண்டு பிறந்தேன். நான் தமிழகத்திலேயே படித்து பட்டம் பெற்றுள்ளேன்.

இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தால் இந்திய குடியுரிமை உள்பட அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டு உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டுக்கு முன்னர் வரை பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் மசோதா இரு அவைகளில் நிறைவேற்றப்பட்டு சட்டமாகிவிட்டது.

இதில் அகதிகளாக வந்துள்ள இலங்கை தமிழர்கள் சேர்க்கப்படவில்லை என தமிழ் அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே தனக்கு குடியுரிமை வழங்காவிட்டால் கருணை கொலை செய்து விடுங்கள் என குறித்த இலங்கைத் தமிழ் இளைஞர் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்