மாணவர்களுக்கு உடல், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு – தொடக்கி வைத்தார் முதலமைச்சர்!

பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு ஊர்திகளை தொடக்கி வைத்தார் முதலமைச்சர். பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஏற்படும் மனநல மற்றும் உடல்நல சார்ந்தபிரச்சனைகளை எதிர்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வை சென்னை அசோக் நகர் மகளிர் பள்ளியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன்படி, பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மருத்துவ குழுவினர் அடங்கிய வாகனங்களை துவக்கி வைத்தார் முதல்வர். தமிழ்நாடு முழுவதும் 800 வாகனங்கள் மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை … Read more

மாணவர்கள் தொட்டுவிடும் தொலைவில் போதை.. விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி என்ன பயன்? – ராமதாஸ்

மது மற்றும் போதை பழக்கத்தில் இருந்து மாணவர்களை விடுவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல். தெருவுக்கு தெரு மதுக்கடைகளை திறந்து மாணவர்கள் தொட்டுவிடும் தொலைவில் போதையை வைத்து விட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி என்ன பயன் விளையும்? என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மது மற்றும் போதை பழக்கத்தில் இருந்து மாணவர்களை விடுவிக்க வேண்டும். மது அருந்துவதும் போதையில் வன்முறையில் ஈடுபடுவதும் தான் சாகசம் என்ற தவறான எண்ணம் … Read more

சாலையில் நின்றவருக்கு முகக்கவசம் அணிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சாலையோர சென்ற பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்திய முதலமைச்சர் மு.க ஸ்டாலின். தமிழகத்தில் ஓமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், மேலும் கூடுதலாக என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பது குறித்து மருத்துவ வல்லுநர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து, வீட்டுக்கு புறப்பட்ட முதலமைச்சர் முக ஸ்டாலின், அண்ணா சாலையில் சென்றபோது சாலை யோரமாக காரை நிறுத்த … Read more

கேரளா போலீசார் டான்ஸ் வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு.!

இந்தியாவில் கொரோனாவால் 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது.இதனால் மார்ச் 31-ம் தேதி வரை பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய ,மாநில அரசு கூறியுள்ளது. கொரோனா வைரஸ் கைகள் மூலமாக உடலில் பரவும் என்பதால்  உலக சுகாதார அமைப்பு கூறுகையில் , முககவசங்கள் அணிவதை விட கைகளை கழுவுவது தான்  சிறந்த தடுப்பு என கூறியுள்ளது. மேலும் வெளியில் … Read more

21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை.! மீறினால் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்க கோரிக்கை.!

அமெரிக்காவில் ஜான் ரோட்ஜர்ஸ் என்பவர் அதில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போனை சொந்தமாக வைத்திருப்பதையும், உபயோகப்படுத்துவதும், சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த தடையை மீறுவோருக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனையும் மற்றும் அபராதமாக விதிக்க வேண்டும் என்றும் அதில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். அதில் சிலர் செல்போன் இல்லையென்றால் பைத்தியம் பிடித்தது போல் காணப்படுவார்கள். சிறு குழந்தைகள் கூட செல்போன் இருந்தால் தான் சாப்பிடவே … Read more

தேசிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி…!!

சேலம் மாவட்டத்தில் தேசிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி, 23 ஆயிரம் சதுர அடியில் வரையப்பட்ட பிரமாண்ட ஓவியம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. தேசிய பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினம் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், சேலம் மாவட்டம் காந்தி மைதானத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பிரமாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, அரசு அதிகாரிகள், பெண்கள் பாதுகாப்பு அமைப்புகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு … Read more

போக்குவரத்துத் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் காடச்சநல்லூர் பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், கிராமப்புறங்களில் பொதுமக்கள் எளிதில் ஓட்டுநர் உரிமம் பெற முகாம்கள் அமைக்கப்பட்டு 300 மேற்பட்டோருக்கு ஓட்டுநர் பயிற்சி உரிமம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர் முத்துசுவாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேட்டுப்பாளையத்தில் போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பேரணி…!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட நகர மற்றும் கிராமப்புறங்களில், தமிழக அரசின் மதுவிலக்கு காவல்துறை மற்றும் ஆயத்தீர்வுத்துறை சார்பில், போதை பொருட்களுக்கு ஏதிரான விழிப்புணர்வு கலை நிகழ்சிகள் நடத்தப்பட்டன. கிராமிய பாடல்கள் மற்றும் நடனங்கள் ஆடி கலைக்குழுவினர் விழிப்புணர்வு பிரசாரத்தில் … Read more