“எஸ் சி,எஸ்டி, ஓபிசி மாணவர்கள் படிப்பு உதவித்தொகை; பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பை உயர்த்தவேண்டும்” – எம்பி ரவிக்குமார் கோரிக்கை..!

எஸ் சி,எஸ்டி, ஓபிசி மாணவர்கள் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பை உயர்த்தவேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு விழுப்புரம் எம்பி ரவிக்குமார்  கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பல்வேறு விதமான படிப்பு உதவித் தொகைகள் மத்திய அரசின் பங்களிப்போடும், தமிழ்நாடு அரசாலும் வழங்கப்படுகின்றன. 8 லட்ச ரூபாய் ஆண்டு … Read more

அடேங்கப்பா.! ரூ.1,161 கோடியே 74 லட்சம் வருமானத்தை கொடுத்த பணக்கார கடவுள்.!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2019-ம் ஆண்டு 2 கோடியே 78 லட்சத்து 90 ஆயிரத்து 179 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் காணிக்கையாக ரூ.1,161 கோடியே 74 லட்சம் கிடைத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பணக்கார கடவுள் என்று அழைக்கப்படும், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அனைவரும் வருடம்தோறும் சென்று அவர்களது வேண்டுதலுக்கு ஏற்ப முடி மற்றும் உண்டியல் காணிக்கையை செலுத்தி வருகிறார்கள். அவ்வப்போது சென்று வரும் போது சிறப்பு வாய்ந்த லண்டு … Read more

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலுக்கு 70-வது இடத்தை பிடித்த ஹிந்தி நடிகை எதிர்ப்பு.!

போர்ப்ஸ் பத்திரிகை சமீபத்தில் தான் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டது. போர்ப்ஸ் இதழுக்கு ஆண்டு வருமானம் குறித்த உறுதியான தகவலை அறியாமல் பட்டியலை வெளியிட்டது எப்படி என இந்தி நடிகை கங்கணா தரப்பில் கேள்வி எழுந்துள்ளது. கடந்த நாட்களுக்கு முன்பு தான் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பத்திரிகையில் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் நடிகை கங்கனா ரணாவத் ரூ.17.5 கோடி வருவாயுடன் 70-வது இடத்தைப் … Read more