10 சதவீத இடஒதுக்கீடு.! காங்கிரஸை தொடர்ந்து திமுக சார்பிலும் சீராய்வு மனு தாக்கல்.!

OBC பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக சீராய்வு மனு அளித்துள்ளது.   கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் OBC பிரிவில் பொருளாதாரத்தில்  பின்தங்கியவர்களுக்கு எஸ்.சி/ எஸ்.டி , MBC, BC வகுப்பினருக்கு அளிக்கும் இடஒதுக்கீடு போல 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் உச்சநீதிஅம்மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிவில் கடந்த … Read more

சங்பரிவார் சதி திட்டத்தை ஓபிசி மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் – திருமாவளவன்

அநீதியை எதிர்த்து தீவிரமாக களமாட வேண்டிய பொறுப்பு ஓபிசியினருக்கு உள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு வழங்கிய 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பில் 10% இட ஒதுக்கீடு செல்லும் என 3 நீதிபதிகள் ஆதரவாகவும், தலைமை நீதிபதி உள்ளிட்ட இருவர் 10% இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் தீர்ப்பு வழங்கினர். பெரும்பான்மை நீதிபதிகள் சரி என்றதால் 10% இடஒதுக்கீடு உறுதியானது. இதுகுறித்து திருமாவளவன் அவர்கள், … Read more

#Breaking:ஓபிசி 27 % இட ஒதுக்கீடு அனுமதி – உயர்நீதிமன்றம் அறிவிப்பு..!

மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 % இடஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டுமென திமுக,அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றன. மேலும்,இந்த இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தக்கோரி தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு … Read more

“எஸ் சி,எஸ்டி, ஓபிசி மாணவர்கள் படிப்பு உதவித்தொகை; பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பை உயர்த்தவேண்டும்” – எம்பி ரவிக்குமார் கோரிக்கை..!

எஸ் சி,எஸ்டி, ஓபிசி மாணவர்கள் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பை உயர்த்தவேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு விழுப்புரம் எம்பி ரவிக்குமார்  கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பல்வேறு விதமான படிப்பு உதவித் தொகைகள் மத்திய அரசின் பங்களிப்போடும், தமிழ்நாடு அரசாலும் வழங்கப்படுகின்றன. 8 லட்ச ரூபாய் ஆண்டு … Read more