அடேங்கப்பா.! ரூ.1,161 கோடியே 74 லட்சம் வருமானத்தை கொடுத்த பணக்கார கடவுள்.!

  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2019-ம் ஆண்டு 2 கோடியே 78 லட்சத்து 90 ஆயிரத்து 179 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
  • இதனால் காணிக்கையாக ரூ.1,161 கோடியே 74 லட்சம் கிடைத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணக்கார கடவுள் என்று அழைக்கப்படும், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அனைவரும் வருடம்தோறும் சென்று அவர்களது வேண்டுதலுக்கு ஏற்ப முடி மற்றும் உண்டியல் காணிக்கையை செலுத்தி வருகிறார்கள். அவ்வப்போது சென்று வரும் போது சிறப்பு வாய்ந்த லண்டு போன்ற பிரசாத வகைகளை வாங்கி வருவார்கள். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு 2 கோடியே 78 லட்சத்து 90 ஆயிரத்து 179 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் கடந்தாண்டில் காணிக்கையாக உண்டியல் மூலம் ரூ.1,161 கோடியே 74 லட்சம் கிடைத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டில் 12 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரத்து 815 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது எனவும், 1 கோடியே 16 லட்சத்து 61 ஆயிரத்து 625 பக்தர்கள் முடி காணிக்கை செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் ரூம் வாடகை மூலம் ரூ.83 கோடியே 71 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாகவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்