விடைபெற்றார் ஏ.கே.விஸ்வநாதன்.. பொறுப்பேற்ற மகேஷ் குமார்!

சமீபத்தில் சென்னை மாவட்ட காவல் ஆணையரான ஏ.கே.விஸ்வநாதன் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, தமிழக ஆபரேஷன் பிரிவு டிஜிபியாக இருந்த மகேஷ் குமார் அகர்வால் சென்னை மாவட்ட காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட நிலையில், சென்னை மாவட்ட காவல் ஆணையரான ஏ.கே.விஸ்வநாதன், தமிழக செயலாக்கம் பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். புதிய காவல் ஆணையர் மகேஷ் குமாரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விடைபெற்றார் ஏ.கே.விஸ்வநாதன். சென்னையின் 107-வது காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

#Breaking: சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இடமாற்றம்!

சென்னை மாவட்ட காவல் ஆணையரான ஏ.கே.விஸ்வநாதன் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, தமிழக ஆபரேஷன் பிரிவு டிஜிபியாக இருந்த மகேஷ் குமார் அகர்வால் சென்னை மாவட்ட காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். மேலும் மகேஷ் குமார் அகர்வால், கொரோனா தடுப்பு பிரிவு சிறப்பு குழுவில் சென்னை வடக்கு மண்டல சிறப்பு ஐபிஎஸ் அதிகாரியாகவும் உள்ளார். இந்நிலையில் சென்னை மாவட்ட காவல் ஆணையரான ஏ.கே.விஸ்வநாதன், தமிழக செயலாக்கம் பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.

ஆலோசகர் குழுவிலிருந்து தூக்கப்பட்ட ஆனந்த்- சச்சின்..!

விளையாட்டை மேம்படுத்தும் ஆணையத்தின் ஆலோசகராக பணியற்றி வந்த சச்சின் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த். ஆலோசனைக் குழுவிலிருந்து பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். விளையாட்டுத்துறை அமைச்சராக சர்பானந்தா சோனோ இருந்த போது, விளையாட்டை மேம்படுத்தும் வகையில்  இந்த ஆணையம் நிறுவப்பட்டது. இதற்காக அமைக்கப்பட்ட ஆலோசகர் குழுவானது 2015ம் ஆண்டு டிசம்பர் முதல் செயல்பட்டது. கடந்த ஆண்டு மே மாதத்துடன் தனது பதவிக்காலத்தை இக்குழு நிறைவு செய்தது.இதன் பின்  குழுவின் உறுப்பினர்கள் 27லிருந்து 18ஆக குறைக்கப்பட்டது.மாநிலங்களவை உறுப்பினரான சச்சின் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் … Read more

குழந்தைகள் வன்கொடுமைகளுக்கு தடுக்க சமூகம் முன் வர வேண்டும்..! காவல் ஆணையர் ஏ. கே விஸ்வநாதன்

தமிழக காவல்துறை பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகிறது என்று காவல் ஆணையர் ஏ. கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல் ஆணையர் ஏ. கே விஸ்வநாதன் கூறுகையில்,தமிழக காவல்துறை பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகிறது .குழந்தைகள் வன்கொடுமைகளுக்கு தடுக்க சமூகம் முன் வர வேண்டும்.அப்போதுதான் இது போன்ற குற்றங்களை தடுக்க முடியும் என்று  காவல் ஆணையர் ஏ. கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.