டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.8 குறைப்பு..! டெல்லி அரசு அதிரடி..!

டெல்லியில் 30% இருந்து 19.40% ஆக வாட் வரி குறைப்பால் நள்ளிரவு முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.8 குறைந்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் ரூ.10-ம் குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை பின்பற்றி மாநில அரசுகளும் பெட்ரோல்-டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது. அந்த வகையில், டெல்லியில் பெட்ரோல் மீதான வாட் வரியை லிட்டருக்கு ரூ.8 குறைத்து … Read more

“பல மாநிலங்கள் குறைத்து விட்டன;தமிழக அரசே உடனடியாக நடவடிக்கை எடு” – ம.நீ.ம வலியுறுத்தல்!

தமிழகம்:பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை தமிழக அரசு குறைக்காமல் இருப்பது ஏமாற்றமளிப்பதாக ம.நீ.ம.துணைத்தலைவர் தங்கவேலு தெரிவித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை, தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் தங்கவேலு வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் கலால் வரி பிரதான பங்கு வகிக்கிறது. தீபாவளி அன்று பெட்ரோல் … Read more

மக்களே…இன்றைய பெட்ரோல்,டீசல் விலை எவ்வளவு தெரியுமா?

சென்னையில் 2 வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.அந்த வகையில்,தமிழகத்தில் இந்த வருட தொடக்கத்திலிருந்து பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 100 க்கு மேல் விற்பனையாகி வந்தது.தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு … Read more

தமிழ்நாடு அரசு வாட் வரியை குறைக்க வேண்டும் – ஓபிஎஸ் அறிக்கை

தமிழ்நாடு அரசு வாட் வரியை குறைக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு வாட் வரியை குறைக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அச்சாணியாக விளங்கும் டீசலின் விலை லிட்டருக்கு 100 ரூபாயையும் தாண்டி உயர்ந்து கொண்டே போவதைச் சுட்டிக்காட்டி, இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள், இதர … Read more