ம.பி. எம்.பி.யாக போட்டியின்றி தேர்வாகும் மத்திய அமைச்சர் எல்.முருகன்..!

  மத்திய அமைச்சர் எல்.முருகன் அவர்கள்,மத்திய பிரதேசத்தில் இருந்து, மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்தபோது, தமிழக பாஜக தலைவராக இருந்த எல் முருகனுக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வள இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. எனினும்,அவர் எம்.பி.யாக இல்லாத காரணத்தினால், 6 மாதத்திற்குள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஒன்றில் எம்.பி.யாக வேண்டும். இந்த சமயத்தில்,மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள … Read more

“பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்” – முதல்வர் ஸ்டாலின்..!

பிரதமர் நரேந்திர மோடியின் 71-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு,முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் 71-ஆவது பிறந்தநாளான அவரது பிறந்தநாள் இன்று, பாஜகவினரால் சிறப்பாக  கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பாஜகவினர் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும்,சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மத்திய இணை அமைச்சர் … Read more

“பவானிப்பூர் தேர்தலில் முதல்வர் மம்தா தோற்கப்போவது அவருக்கே தெரியும்” – பாஜக தலைவர் திலீப் கோஷ்..!

பவானிப்பூர் சட்டமன்றத் தொகுதியிலும் தான் தோல்வியடையக்கூடும் என்று முதல்வர் மம்தா பானர்ஜிக்குத் தெரியும் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.  மேற்கு வங்கத்தில் பவானிப்பூர், ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,மேற்குவங்க பவானிப்பூர் இடைத்தேர்தலில் போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி செப்டம்பர் 10 ஆம் தேதி  வேட்புமனு தாக்கல் செய்தார். நடந்து முடிந்த சட்டமன்ற … Read more

தமிழிசை குற்றச்சாட்டு !!

  பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை, ஊழல் செய்தது கார்த்தி மட்டுமல்ல ப.சிதம்பரமும் தான் என  தெரிவித்துள்ளார்.  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்தரராஜன் இன்று கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். நாடாளுமன்றம் செல்லாமல் மேடைகளில் மட்டும் காவிரி பிரிச்னை பற்றி பேசி வருவதாக அன்புமணி ராமதாஸ் மீது அவர் குற்றம்சாட்டினார். … Read more