கமலஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை…!

நடிகர் கமலஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை.  பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் இன்று  பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ட்வீட்  செய்துள்ளார்.அந்த ட்விட்டர் பதிவில், ‘இந்திய திரை உலகின் தலைசிறந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான திரு.கமலஹாசன் அவர்களுக்கு பாஜக சார்பில் … Read more

இந்தி-இந்துத்துவா என்ற பாஜகவின் கனவு பகல்கனவாகவே போகும் – அமைச்சர் மனோ தங்கராஜ்

400 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த இந்தியை திணிப்பதன் அவசியம் என்ன? என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட்.  குமரியில் திமுக சார்பில் இந்தி திணிப்பை எதிர்த்து தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், குமரி மே.மா திமுக சார்பில் நடைபெற்ற இந்தி திணிப்பை எதிர்த்து தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது கழக உடன்பிறப்புகள் … Read more

நீங்கள் ஏமாற்றப்பட்டு உள்ளீர்கள் மோடி, அமித்ஷா – அமைச்சர் ஏ.வ.வேலு

மத்திய அரசை பொருத்தவரையில் இந்திக்கு தாய்ப்பால், மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பால் என்ற நிலையில் தான் செயல்பட்டு வருகிறது என அமைச்சர் ஏ.வ.வேலு பேச்சு.  திமுக சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரையாற்றினார். இந்தி திணிப்பு தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. நாமும் தொடர்ந்து இந்தியை எதிர்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். மத்திய அரசை பொருத்தவரையில் இந்திக்கு தாய்ப்பால், மற்ற மொழிகளுக்கு … Read more

பாலுக்கு GST வரி விலக்கு இருப்பது கூட தெரியாதவர் தான் பால்வளத்துறை அமைச்சர் – அண்ணாமலை

பாலுக்கு GST வரி விலக்கு இருப்பது கூட தெரியாதவர் தான் திறனற்ற திமுக ஆட்சியின் பால்வளத்துறை அமைச்சர் என அண்ணாமலை ட்வீட்.  ஆவின் பால் நிறுவனத்தில் வியாபார நோக்கத்திற்கு விநியோகிக்கப்படும் ஆரஞ்சு நிற பால் லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டு, லிட்டர் 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இந்த விலையுயர்வுக்குறித்து விளக்கமளித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், மத்திய அரசு பாலுக்கு கூட ஜிஎஸ்டி வரி போட்டுள்ளது. இது வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வு … Read more

மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை.! 2024 தேர்தல் குறித்து ஆலோசனை.?

இந்தியா சிமெண்ட் ஆண்டு விழாவுக்கு வரும் நவம்பர் 12ஆம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வரவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.  இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் ஆண்டு விழாவானது வரும் நவம்பர் மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்று மத்திய அமைச்சர் அமித்ஷா நவம்பர் 12இல் தமிழகம் வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழக பாஜக நிர்வாகிகளுடன் 2024 சட்டமன்ற … Read more

நல்ல சூழலில் வளர்ந்த ஆண்கள் பெண்களை பற்றி தவறாக பேசமாட்டார்கள் – குஷ்பூ

நல்ல சூழலில் வளர்ந்த ஆண்கள் பெண்களை பற்றி தவறாக பேசமாட்டார்கள் என குஷ்பூ பேட்டி.  நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பூ, தன்னை தரக்குறைவாக பேசிய திமுக பேச்சாளர் மற்றும் அவரது பேச்சை ரசித்தபடி அமர்ந்திருந்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ஷர்மரேகாவிடம் புகார் அளித்தார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஷ்பூ, நல்ல சூழலில் வளர்ந்த ஆண்கள் பெண்களை பற்றி தவறாக பேசமாட்டார்கள். பெண்கள் குறித்து தவறாக பேசும் போது அதை … Read more

பாஜகவினர் புளுகுமூட்டைகள்.! அமைச்சர் மனோ தங்கராஜ் கடும் விமர்சனம்.!

வெட்டி ஒட்டி சித்தரித்து பொய்யான ஒரு வீடியோவை பாஜகவினர் பரப்புகின்றனர். உண்மையாகவே புழுகுமூட்டைகள் தான். – அமைச்சர் மனோ தங்கராஜ் டிவீட்.   திமுக பேச்சாளர் சைதை சாதிக் அண்மையில் ஒரு திமுக கூட்டத்தில் பேசுகையில் குஷ்பூ, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் பற்றி சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்து பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த திமுக கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் … Read more

ஆளுநர் பதவி விலக வேண்டும் – ஜி.ராமகிருஷ்ணன்

தமிழக ஆளுநர் தாமாகவே பதவி விளக்க வேண்டும் என சிபிஎம் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி.  திருவாரூர், திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆளுநர் என்பது அரசியல் சட்டத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட ஒரு பொறுப்பு. ஆளுநர் மத்திய பாஜக அரசின் பிரதிநிதி அல்ல. ஆனால், தமிழக மற்றும் கேரள ஆளுநர்கள் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் போல பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து … Read more

தவறான நிர்வாகம், பொய்கள் இதுதான் திமுக! – அண்ணாமலை

இதயம் இல்லாத திமுக அரசு “நன்றாக வேலை செய்துள்ளோம்” என்று தன் முதுகில் தட்டிக் கொள்கிறது என அண்ணாமலை ட்வீட்.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், மழை வெள்ள பாதிப்பு குறித்து தனது ட்விட்டர் வீடியோ ஒன்றை பதிவிட்டு, திமுக அரசு பொய் சொல்வதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘“தவறான நிர்வாகம் & பொய்கள் -இதுவே திமுக!” மழைக்கு முன் போதிய முன்னேற்பாடுகள் செய்யாததால் சாமானிய மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு … Read more

தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை..!

மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்களின் பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு பாஜக சார்பாக நன்றி என அண்ணாமலை ட்வீட்.  மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்களின் பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்களின் பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு பாஜக சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அறிவிப்பு … Read more