முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு

அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்பட்டு இருந்தால் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு. அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி வீரபாண்டி பகுதியில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த அதிகாரி யார்?, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரி மீது வழக்கு பதிவு செய்வதோடு உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணையிட்டுள்ளது. எவ்வாறு அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுபோன்ற நிலை … Read more

அங்கீகாரம் இல்லாத மனைகள் – பதிவு அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவு

அங்கீகாரம் இல்லாத மனையை பத்திரம் பதிவு செய்ய மறுப்பதற்கு பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, கடந்த 2016 அக்டோபர் 20ம் தேதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை வரன்முறை செய்யும் திட்டத்தை கடந்த 2017ல் மே 4ம் தேதி அறிவித்தது. இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் அங்கீகாரம் இல்லாத மனை பத்திரம் பதிவு குறித்து … Read more

“பத்திரப்பதிவில் இதனை குறைத்தோ,அதிகரித்தோ காட்டினால் நடவடிக்கை;அபராதம் வசூல்” – அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை!

தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் ரூ.12,700 கோடி அரசுக்கு நிதிவருவாய் கிடைக்கப்பெற்றுள்ளது என்றும்,பத்திரப்பதிவு மேற்கொள் பொதுமக்களும் அரசால் நிர்ணயக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பீட்டின்படி பதிவு மேற்கொள்ள வேண்டும் என்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் ரூ.12,700 கோடி அரசுக்கு நிதிவருவாய் கிடைக்கப்பெற்றுள்ளது. அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் அரசுக்கு  செலுத்தவேண்டிய பதிவுக்கட்டணம் அனைத்தும் இணையவழி நடைமுறைகள் மூலமாக … Read more

#Breaking:இனி போலிப்பத்திரம் ரத்து…..பத்திரப்பதிவு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம் …!

தமிழக சட்டப்பேரவையில் பத்திரப்பதிவு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டபேரவையில் குறு – சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை,மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்டவைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,தமிழகத்தில் போலி பத்திரத்தை ரத்து செய்யும் அதிகாரம் வழங்கும் சட்ட திருத்த மசோதா சட்டப் பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், யாரேனும் போலி பத்திரத்தை பதிவு செய்திருந்தால் அதை பத்திரப்பதிவு தலைவரே நீக்கம் செய்ய வழிவகை உண்டு.இந்த சட்டத் … Read more