முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு

அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்பட்டு இருந்தால் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.

அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி வீரபாண்டி பகுதியில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த அதிகாரி யார்?, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரி மீது வழக்கு பதிவு செய்வதோடு உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணையிட்டுள்ளது.

எவ்வாறு அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுபோன்ற நிலை தொடர்ந்தால் ஒவ்வொரு துறை செயலாளரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டிய நிலை ஏற்படும். அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்பட்டு இருந்தால் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சியில் அரசு அங்கீகாரம் பெறாமல் சட்டவிரோதமாக நிலம் பத்திரப்பதிவு நடப்பதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை சார் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment