பொதுப்பணித்துறையில் புதியதாக கோவை மண்டலம் உருவாக்கம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு

கோவை:பொதுப்பணித்துறையில் புதியதாக கோவை மண்டலம் உருவாக்கம் செய்ய உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஆக.27 ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது,பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்டு பொதுப்பணித்துறையில் புதிய மண்டலம் உருவாக்கப்படும் என்ற அறிப்பினை வெளியிட்டார். இந்நிலையில்,பொதுப்பணித்துறை,சென்னை மண்டலம் மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அலுவலங்களை மறுசீரமைத்து பணி அடிப்படையிலும் மற்றும் புதிய பணியிடங்களை தோற்றுவித்தும்,கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக … Read more

கோயம்புத்தூர் : சுற்றுலா தலங்கள் ..!

தமிழ்நாடு வேகமாக வளர்ச்சியடைந்து வரும் தென்னிந்திய மாநிலமாகும். நீண்ட வரலாற்றையும் தனித்துவ பண்பாட்டையும் அழகிய நிலப்பகுதிகளையும் தமிழ்நாடு கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை இந்தியாவில் இரண்டாம் நிலையில் இருக்கிறது. பண்டைத் தமிழர் தமிழ்நாட்டின் இட அழகை முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என வகுத்து விபரித்தனர். அதாவது தமிழ்நாடு காடு, மலை, பாலை, வயல், கடல் ஆகிய இயற்கை அழகைக் கொண்டது. எழில் கொஞ்சும் நீலகிரி மற்றும் கோடைக்கானல் மலைப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப் பகுதிகள், கிழக்கு கடற்கரை பகுதிகள் போன்ற மனம் கவரும் பல இடங்கள் உண்டு.  கோயம்புத்தூரில் உள்ள சுற்றுலா தலங்களைக்  காண்போம்… கோயம்புத்தூர் : ஆனைமலை விலங்குகள் சரணாலயம் அவினாசி கோயில் … Read more

கோவையில் தேவாலயத்திற்குள் புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல்!நான்கு பேர் காயம் ..

கோயம்புத்தூர் மாவட்டம்  மத்தம்பாளையத்தில் தேவாலயத்திற்குள் புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல்  நடத்தியதில்  4 பேர் காயம் என தகவல்.

போராட்டமில்லாமல் யாராட்டமும் செல்லாது…!

கோவை- சென்னை ரயிலில் ஈசா லிங்கத்தை அடையாளமாக்கியது ரயில்வே. உடனடியாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம் அறிவித்தது.மேலும் சில  சமூகநீதி இயக்கங்களும் இதற்கு  கண்டனம் தெரிவித்தனர். முற்போக்கு எண்ணம் கொண்ட பத்திரிகையாளர்கள் முக்கியத்துவம் அளித்து தங்கள் ஊடகங்களில் வெளியிட்டனர்.தீக்கதிர் உள்ளிட்ட பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களிலும் போராளிகள் கொந்தளித்தனர். ரயில்வே நிர்வாகம் பணிந்தது லிங்கம் மாற்றப்பட்டு கோவை ரயில் நிலையத்தின் படம் இடம்பெற வைத்தது…

கோவை முக்கிய வீதியில் கொள்ளை,.

கோயம்புத்தூர்; வெரைட்டி ஹால் பகுதியை அடுத்த, தாமஸ் என்ற வீதி உள்ளது இதில் ஏராளமான மொத்த கொள்முதல் மற்றும் விற்பனை நிலையங்கள் உள்ளன. இங்கு அழகு சாதன பொருள்கள் மற்றும் வீட்டுக்கு தேவையான முக்கிய பொருள்கள் அதிக அளவில் விற்பனை செய்யபட்டு வருகின்றன. இங்கு ஐந்துக்கும் மேற்பட்ட கடைகளுக்குள் புகுந்த  மர்ம நபர்கள் ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். 

விமானத்தில் பறவை மோதியதால் திடீர் தரையிறக்கம்.

கோயம்புத்தூர்; விமான நிலையத்தில் இருந்து ஏர் அரேபியா என்ற விமானம் , ஓடுதளத்தில் பறந்து வந்த மயில் மீது மோதி விமானம் சேதம்  அடைந்தது. இந்த விபத்தையடுத்து,விமானி பயணிகளை பத்திரமாக தரை இறங்கினார். ஷார்ஜா செல்ல வேண்டிய இந்த விமானத்தில் 163 பயணிகள் இருந்தனர்.தற்போது இந்த பயணிகள்  ஓட்டலில் தங்க வைக்கபட்டு உள்ளனர். விமானத்தை சரிசெய்ய, சென்னையில் இருந்து தொழில்நுட்ப குழு கோவை விரைந்துள்ளது.