கோடநாடு விவகாரம் – அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் விசாரணை…!

கோடநாடு கொலை, கொள்ளை, தொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.  கடந்த 2017 ஆம் ஆண்டு நிகழ்ந்த கோடநாடு கொலை, கொள்ளை, தொடர்பாக சயான் மற்றும் வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ள  நிலையில், இவ்வழக்கு சம்மந்தமாக பல்வேறு திருப்பங்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை, தொடர்பாக … Read more

#Breaking:கோடநாடு விவகாரம்….கனகராஜின் உறவினரை 5 நாட்கள் விசாரிக்க அனுமதி ..!

கோடநாடு விவகாரம் தொடர்பாக கனகராஜின் உறவினரை 5 நாட்கள் விசாரிக்க உதகை நீதிமன்றம் அனுமதி. கோடநாடு கொலை,கொள்ளை தொடர்பான வழக்கு இன்று உதகை  நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இதில்,முதன்மை குற்றவாளியான சயான்,வாளையாறு மனோஜ் உள்ளிட்டோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.இந்த வழக்கு விசாரணையின்போது,காவல்துறையினர் கூடுதல் விசாரணைக்கு காலஅவகாசம் கேட்டனர். இதனையடுத்து,வழக்கு அடுத்த மாதம் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில்,கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உயிரிழந்த கார் ஓட்டுனர் கனகராஜின் உறவினர் ரமேஷ் என்பவரை 5 நாட்கள் … Read more

கோடநாடு கணினி ஆப்ரேட்டர் தற்கொலை…! மறுவிசாரணை .தொடக்கம்..!

கோடநாடு எஸ்டேட்டில் கணினி இயக்குநராகப் பணியாற்றி வந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தினேஷ் தந்தை போஜனிடம்  இன்று மறுவிசாரணை தொடங்கியுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக ஏடிஜிபி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படை அமைத்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த 2017ல் இறந்த தினேஷ்குமார் மரணம் குறித்து தனிப்படை போலீசார் மீண்டும் விசாரிக்க முடிவு செய்தனர். இதனையடுத்து, கோடநாடு எஸ்டேட்டில் கணினி இயக்குநராகப் பணியாற்றி வந்த தினேஷ் தற்கொலை … Read more

கோடநாடு பற்றி முதலில் பேசியது அதிமுக தான் – ஜெயகுமாருக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு!

கோடநாடு குறித்து முதலில் சட்டப்பேரவையில் பேசியது அதிமுகதான் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலில் பேசியது அதிமுகதான். தற்போது கோடநாடு பற்றி பேசக்கூடாது என்றால், சட்டப்பேரவைக்கு ஏன்? கொண்டு வந்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சட்டப்பேரவையில் பேச கூடாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவது வேடிக்கையாக உள்ளது என்றும் … Read more