“அமைச்சரின் இத்தகைய வாக்குறுதி;அதோகதி,குழிதோண்டி புதைக்கப்படும் என்பதுதான்” – ஓபிஎஸ் காட்டம்!

உள்கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்ட பின் மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறை அமல்படுத்தப்படும் என்று கூறிய மின்சாரத்துறை அமைச்சரின் வாக்குறுதி ‘அதோகதி’ என்பது சூசகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். “உள்கட்டமைப்புகளை பலப்படுத்திய பின் தமிழகத்தில் மாதாந்திர மின் கணக்கீடு முறை அமல்படுத்தப்படும்” என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளது, நீட்தேர்வு ரத்து, எழுவர் விடுதலை, கல்விக்கடன் ரத்து ஆகிய அறிவிப்புகள் போல் இதுவும் குழிதோண்டி புதைக்கப்படும் என்பதையே சுட்டிக் காட்டுகிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் … Read more

“கல்விக் கடன் ரத்து உள்ளிட்ட வாக்குறுதி..அதை நிறைவேற்றுங்கள் முதல்வரே” – ஓபிஎஸ் வலியுறுத்தல்..!

திமுக அளித்த வாக்குறுதிகளை நம்பித்தான் பொதுமக்கள் தி.மு.க.விற்கு வாக்களித்ததாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், எந்த வாக்குறுதிகளை நம்பி தி.மு.க.விற்கு மக்கள் வாக்களித்தார்களோ அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களின் ஆதங்கம்: “நான்கு மாதங்களுக்குள் 505 வாக்குறுதிகளில், 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டிய அரசு இந்தியத் துணைக் கண்டத்திலேயே தி.மு.க. அரசாகத்தான் இருக்கும்” என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெருமைப்பட்டுக் … Read more

புதுச்சேரியில் கல்வி கடன் ரத்து – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!

சுகாதாரத்துறையில் 10 ஆண்டுக்கு மேல் உள்ள மருத்துவ பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவர் என முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு. புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்ட மேம்பாட்டு கழகம் மூலம் பெற்ற கல்விக்கடன் அனைத்தும் ரத்து என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். சென்டாக் மூலம் தீவு செய்யப்படும் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார். பயிற்சி மருத்துவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.20,000 ஆக வழங்கப்படும் என்றும் சுகாதாரத்துறையில் 10 ஆண்டுக்கு மேல் உள்ள மருத்துவ பணியாளர்கள் நிரந்தரம் … Read more

#Breaking:”தியாகிகள் பென்சன் ரூ.10 ஆயிரமாகவும்;ஈமச்சடங்கு நிதியுதவி ரூ.25 ஆயிரமாகவும் உயர்வு” – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..!

புதுச்சேரியில் தியாகிகள் பென்சன் ரூ.9 ஆயிரத்திலிருந்து ரூ.10,000 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வருகிறது.அதன்படி,இன்று நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் புதுச்சேரி முதல்வர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.அதன்படி, புதுச்சேரியில் தியாகிகள் பென்சன் ரூ.9 ஆயிரத்திலிருந்து ரூ.10,000 ஆயிரமாக உயர்த்தப்படும். பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.500 உயர்த்தப்படும். ஆதிதிராவிட மற்றும் பட்டியலின மக்களின் ஈமச்சடங்கு நிதியுதவி ரூ.15 ஆயிரத்திலிருந்து … Read more