சூப்பர்…சிறப்பாக செயல்படும் 3 விடுதிகளுக்கு ரூ.7,80,000 மதிப்பில் பரிசுகள் – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

சென்னை:தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் 3 விடுதிகளுக்கு பரிசுகள் வழங்க நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் 2021-2022 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் படி, ஆண்டு தோறும் மாவட்ட அளவில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் சிறந்த மூன்று விடுதிகளை தேர்வு செய்து பரிசுகள் வழங்க நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக … Read more

குட்நியூஸ்…இனி ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம்,குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்கலைப் பெறலாம்- தமிழக அரசு அரசாணை வெளியீடு

மின்னணு ரீதியில் ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை உள்ளிட்டவைகளின் நகல்கலைப் பெறும் வசதியை செயல்படுத்தப்படுவதற்கான உத்தரவை பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையானது – காகிதமற்ற நிர்வாகத்தை அடையவும்,அனைத்து அரசுத் துறைகளாலும் டிஜிலாக்கர் அமைப்பை ஏற்றுக்கொள்ளும் வகையில்,இனி மின்னணு ரீதியில் ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை உள்ளிட்டவற்றின் நகல்கலைப் பெறும் வசதியை செயல்படுத்தப்படுவதற்கான உத்தரவை பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: … Read more

குட்நியூஸ்…இவர்களுக்கெல்லாம் மிதிவண்டி வழங்கப்படும் – தமிழக அரசு அரசாணை!

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 10,583 நபர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 10,583 நபர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக,பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த செப்டம்பர் … Read more

முக்கிய அறிவிப்பு…மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை – வருமான வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு!

கிராமப்புறங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட சில வகுப்புகளை சேர்ந்த மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் பொருட்டு அவர்களின் பெற்றோர்களது ஆண்டு வருமான உச்ச வரம்பினை 1 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலனைச் சேர்ந்த 3 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை கிராமப்புறங்களில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு அவர்களின் பெற்றோர்களது ஆண்டு வருமான உச்ச … Read more

பொதுப்பணித்துறையில் டெண்டர் ஒப்புதல்;அதிகார வரம்பு உயர்த்தி உத்தரவு – தமிழக அரசு அரசாணை!

சென்னை:பொதுப்பணித்துறையில் டெண்டர் ஒப்புதல் வழங்க அதிகாரிகளுக்கு அதிகார வரம்பு உயர்த்தி தமிழக அரசு அரசாணை. தமிழக சட்டமன்றத்தில் கடந்த  27.08.2021 அன்று நடந்த பொதுப்பணித் துறை மானியக்கோரிக்கை தொடர்பான விவாதத்தின்போது,தொழில்நுட்ப ஒப்புதல் மற்றும் ஒப்பந்தப்புள்ளி ஒப்புதலுக்கான தலைமைப் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர்களுக்கு அதிகார வரம்பு உயர்த்தப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். இந்நிலையில்,பொதுப்பணித்துறையில் தொழில்நுட்ப ஒப்புதல் மற்றும் ஒப்பந்தப்புள்ளி ஒப்புதல் வழங்க தலைமைப் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர்களுக்கு அதிகார வரம்பு … Read more

புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நகராட்சி, பேரூராட்சிகளின் வார்டுகள் மறுவரையறை – அரசாணை வெளியீடு!

தமிழகம்:புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நகராட்சி, பேரூராட்சிகளை மறுவரையறை செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்கள் ஏற்கனவே பிரிக்கப்பட்ட நிலையில், அம்மாவட்டங்களுக்கான கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்று,அதில் திமுக அதிக இடங்களை கைப்பற்றியது. … Read more

#Breaking:தமிழக அரசின் பொதுப்பணித்துறை;நீர்வளத்துறை இரண்டாக பிரிப்பு – அரசாணை வெளியீடு!

தமிழக அரசின் நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகியவற்றை இரண்டாக பிரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகிய இரண்டும் தனித் துறைகளாக செயல்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி,நீர்வளத் துறை தொடர்பானவை நீர்வள அமைச்சருக்கும், பொதுப்பணித் துறை தொடர்பானவை பொதுப்பணித் துறை அமைச்சருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும்,இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: “பொதுப்பணித் துறை மற்றும் நீர்வளத் துறைக்கு இடையே, துறையின் நிர்வாகப் பணிகள் பிரிக்கப்பட வேண்டும் என, … Read more

#Breaking: 9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு..!

தமிழக அரசு 9 பேரூராட்சிகளை ,நகராட்சிகளாக மாற்றியதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 9 பேரூராட்சிகள், நகராட்சிகளாக மாற்றப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி, தென்காசி மாவட்டத்தில் – சுரண்டை , திருநெல்வேலி மாவட்டம் – களக்காடு, கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை காஞ்சிபுரம் மாவட்டம் – குன்றத்தூர், மாங்காடு, விழுப்புரம் மாவட்டம் – கோட்டக்குப்பம், இராணிப்பேட்டை மாவட்டம் – சோளிங்கர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நந்திவரம்-கூடுவாஞ்சேரி உட்பட 9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. … Read more