ஜீன்ஸ் பேண்ட் இஸ்திரி முதல்… ரோட்டு கடை டீ வரையில்… இடைத்தேர்தல் பிரச்சார சுவாரஸ்யம்.!

ஈரோடு கிழக்கு தேர்தல் களத்தில் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் வேட்பாளர்களை ஆதரித்து செய்யும் பிரச்சாரங்களில் மக்களை கவர செய்த சின்ன சின்ன விஷயங்களை ஒரு சிறு தொகுப்பாக பார்க்கலாம்.  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவித்து, அதன் பின்னர் வேட்பாளர்கள் யார் எல்லாம் போட்டியிடுவார்கள் என பார்த்து, அதன் பிறகு சிலர் போட்டியியில் இருந்து விலகி, வேட்பு மனு நிராகரிப்பு என கிட்டத்தட்ட பொதுத்தேர்தல் சுவாரஸ்யத்தை இந்த இடைத்தேர்தல் தமிழக அரசியலில் ஏற்படுத்தி வருகிறது. திமுக … Read more

திமுக எம்பி திருச்சி சிவா கூறிய ருசிகர உப்மா கதை… சிரிப்பலையில் நாடாளுமன்றம்.!

நாடாளுமன்றத்தில் பாஜக அரசை கலகலப்பான முறையில் ஒரு உப்மா கதையை கூறி திமுக எம்.பி திருச்சி சிவா விமர்சித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்பி திருச்சி சிவா ஒரு உப்புமா கதையை கூறி நாடாளுமன்றத்தை கலகலப்பூட்டினார். மறைமுகமாக பாஜக அரசை விமர்சித்தும் அவர் இந்த உப்புமா கதையை கூறினார். திருச்சி சிவாவின் உப்மா கதை : அவர் கூறிய கதையாவது, ஒரு … Read more

இன்று எனக்கு கிடைத்த மகிழ்ச்சி செய்திகள்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமை.!

புதுமை பெண் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையை அடுத்த பட்டாபிராம் இந்து கல்லூரியில் தொடங்கி வைத்தார்.  12ஆம் வகுப்பில் அரசு பள்ளியில் பயின்று நல்ல மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு உயர்கல்வியில் மாதம் 1000 ரூபாய் உதவி தொகை பெரும் வகையில் தமிழக அரசு புதுமை பெண் எனும் திட்டத்தை கொண்டு வந்ததது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக செயல்படுத்தி  1.16 லட்சம் மாணவிகள் பயன்பெற்றனர். புதுமை பெண் இரண்டாம் கட்டம் : தற்போது … Read more

நாங்கள் தைரியமாக கூறுகிறோம்… அவர்களால் கூற முடியுமா.? தமிழக பாஜகவுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சரமாரி கேள்வி.!

annamalai and senthil balaji

திமுக உறுப்பினர்கள் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இருக்கின்றனர் என்று நாங்கள் தைரியமாக கூறுவோம். அதே போல பாஜகவால் கூற முடியுமா.? – தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி. தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஈரோட்டில் செய்தியாளர்கள் அளித்தார். அப்போது அவரிடம் தமிழக பாஜக பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர்பாஜக மீதான தனது விமர்சனத்தையும், தமிழக பாஜக மீது பல்வேறு கேள்விகளையும் கொடுத்தார். அவர் கூறுகையில், என்னிடம் பாஜக பற்றியும் … Read more

மத்திய அரசு சர்வாதிகார போக்கை நோக்கி நகர்கிறது.! திமுக எம்பி கனிமொழி பேச்சு.!

மத்திய அரசு சர்வாதிகார போக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகி வருகிறது. என மாநிலங்களவையில் திமுக எம்பி கனிமொழி பேசினார்.  கடந்த வாரம் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து பிப்ரவரி 2,3 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றம் ஆரம்பித்த உடனடியே நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதானி குழும விவகாரம் தொடர்பாக தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் 3 நாட்களாக ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து, இன்று 4வது நாளாக இன்று … Read more

பட்டேல் சிலைக்கு எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் பேனா சிலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.! வைகோ கருத்து.!

பேனா நினைவு சின்னம் அமைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்காது. பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிரான பிரச்சாரம் தேவையற்றது. – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி நினைவாக, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு நேராக 650மீ தொலைவில் கடலுக்கு நடுவே ஓர் பேனா சிலை அமைக்க தமிழக பொதுப்பணித்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரிடம் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் கலந்த வண்ணம் வந்து கொண்டிருக்கிறது. அண்மையில் … Read more

குடிமைபணி தேர்வு.! வயது வரம்பை ஒரு முறை அதிகரிக்க பிரதமருக்கு முதல்வர் முக.ஸ்டாலின் கடிதம்.!

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மத்திய அரசு பணிகள் தேர்வெழுதாமல், தற்போது வயதை காரணமாக கொண்டு தேர்வெழுத முடியாமல் தவிக்கும் இளைஞர்களின் வயது வரம்பை ஒருமுறை கூட்ட வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மத்திய – மாநில அரசு தேர்வுகள் நடைபெறாமல் இருந்து வந்த காலகட்டத்தில், தங்களது வயதை காரணமாகக் கொண்டு தற்போது தேர்வு எழுத முடியாதவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கிட பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் … Read more

2024 தேர்தலுக்கும் அதே செங்கல் தான்.! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்.!

திமுக ஆட்சிக்கு வந்து அதன் பிறகு ஆரம்பிக்க பட்ட கலைஞர் நூலகம் திறக்கப்படும் நிலைக்கு வந்துவிட்டது. ஆனால் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. இதுதான் செயல்படும் அரசுக்கும், செயல்படாத அரசுக்கும் உள்ள வித்தியாசம். – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம். மதுரையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில், சுமார் 72 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், அவர்களுக்கான 180கோடி ரூபாய் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியை … Read more

இரட்டை இலைக்கு ஆதரவு.! ஓபிஎஸ் அறிவிப்பு.! பாஜகவின் ஒற்றுமை ஆலோசனை வெற்றி பெற்றதா.?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவில் இதுவரை நிகழந்த அடுத்தடுத்த நகர்வுகளை இந்த குறிப்பில் சுருக்கமாக காணலாம்.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நேரம் நெருங்க நெருங்க அரசியல் களத்தில் பரபரப்பு கூடிக் கொண்டே போகிறது. நாளுக்கு நாள் ஒவ்வொரு திருப்புமாக அரங்கேறி வருகிறது. ஏற்கனவே திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மறைந்த எம்.எல்.ஏ திருமகன் ஈவேராவின் தந்தையுமான இவிகேஎஸ்.இளங்கோவன் திமுக … Read more

ஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்து செயல்பட வலியுறுத்தினோம்.! பாஜக நிர்வாகி சி.டி.ரவி பேட்டி.!

eps and ops annamalai bjp

திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினோம். – பாஜக நிர்வாகிகள் அண்ணாமலை மற்றும் சி.டி.ரவி செய்தியாளர்களிடம் பேச்சு.  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் சேர்ந்து இன்று காலை எடப்பாடி பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் . அதே போல ஓ.பன்னீர்ச்செல்வம் அவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த இரு சந்திப்புகளை அடுத்து தற்போது பாஜக மாநில தலைவர் … Read more