#BREAKING: மகாராஷ்டிராவில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான்!

நாடு முழுவதும் ஒமிக்ரானால் வகை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36 லிருந்து 37 ஆக உயர்வு. மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் முதல் முறையாக நாக்பூரை சேர்ந்த 40 வயது நபருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேற்கு ஆப்ரிக்காவில் இருந்து வந்துள்ளதாக முதற்க்கட்ட தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதனால் இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது என்பது … Read more

ஒமிக்ரானை இரண்டு மணி நேரத்தில் கண்டறியும் புதிய டெஸ்டிங் கிட் அறிமுகம் – ஐ.சி.எம்.ஆர்

ஒமைக்ரானை இரண்டு மணி நேரத்தில் கண்டறியும் புதிய கருவியை அறிமுகம் செய்த ஐ.சி.எம்.ஆர். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்த நிலையில், தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில், ஒமிக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. புதிதாக உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் … Read more

உலகையே அச்சுறுத்தும் ஒமிக்ரான்;இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 35 ஆக உயர்வு!

கொரோனா வைரஸின் திரிபான ஒமிக்ரான் தொற்று ஆந்திராவில் ஒருவருக்கும்,சண்டிகரில் ஒருவருக்கும் கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் முன்னதாக கொரோனா தீவிரமாகப் பரவிய நிலையில்,தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.இதன்மூலம்,தற்போது கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது. ஆனால்,தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில்,  இந்த வைரசுக்கு ஒமிக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு … Read more

மக்களே…தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்று 14 வது மெகா தடுப்பூசி முகாம்!

தமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) 50 ஆயிரம் இடங்களில்,14 வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸை ஒழிக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.குறிப்பாக,கொரோனா தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் விதமாகவும், தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கையாய் அதிகரிக்கும் விதமாகவும் சனிக்கிழமை தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில்,தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில்,  … Read more