TIk Tokகிற்கு நிரந்தர தடை.? 165 நாட்கள் அவகாசம் கொடுத்த அமெரிக்கா.!

Tik Tok in USA

Tik Tok : தற்போது இணைய உலகில் வைரலாக இருக்கும், ஷார்ட்ஸ் வீடியோ , இன்ஷார்ட்ஸ் வீடியோக்களுக்கு முன்னோடியாக ஒரு காலத்தில் கோலோச்சி இருந்தது சீனாவின் டிக் டாக் செயலி. அதன் பயன்பாடு உலகளவில் பல்வேறு நாடுகளில் இணையவாசிகள் மத்தியில் மிகபிரபலமாக இருந்தது. இந்த செயலி மூலம் பயனர்களின் தரவுகள் கண்காணிக்கப்படுகிறது, அல்லது சட்டவிரோதமாக பயன்ப்படுத்தபடுகிறது என குற்றம் சாட்டி இந்தியா உட்பட ஒரு சில நாடுகளில் டிக் டாக் செயலி தடையை சந்தித்தது. Read More … Read more

கூகுள் பே இனிமேல் இயங்காது ..? இது தான் காரணமா ..!

மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றி வருகிற தொழில்நுட்ப ஆப்பிள் கூகுள் பேயும் (Google Pay) ஒன்று. நாம் எங்கு சென்றாலும் கையில் இருக்க கூடிய போனில் ஒரு ஆப்பை வைத்து பணம் செலுத்தும் முறையை மிகவும் எளிமை படுத்தியதற்கு மிகப்பெரிய பங்கானது கூகுள் பே ஆப்பிற்கு உண்டு. அந்த கூகுள் பே ஆப்பை இந்த ஆண்டில் வருகிற ஜூன் மாதம் 4-ம் தேதியோடு அமெரிக்காவில் நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் அவர்களது வலைப்பதிவில் கடந்த வியாழன் அன்று தெரிவித்துள்ளனர். … Read more

அமெரிக்கா முதல் தாய்லாந்து வரை… இந்த நாடுகளில் கஞ்சா குற்றமில்லை… லிஸ்ட் இதோ…

Growing cannabis craze

இன்று காலை ஜெர்மனியில் ஓர் புதிய சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த சட்டதிருத்தம் தான் தற்போது உலகம் முழுக்க மிகவும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, நமது நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா எனும் போதை பொருளை ஜெர்மனி சட்டபூர்வமாக அனுமதிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யபட்டுள்ளது. இந்த மசோதா மூலம் வரும் ஏப்ரல் மாதம் முதல் கஞ்சா ஜெர்மனியில் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இது போல பல்வேறு உலக நாடுகள் கஞ்சாவை சட்டபூர்வமாக … Read more

அமெரிக்க பேரணியில் துப்பாக்கி சூடு.! ஒரு பெண் பலி… பலர் கவலைக்கிடம்.!  

KKFI DJ Lisa Lopez-Galvan - Kansas City Gun fire

அமெரிக்கா மிசோரியின் கன்சாஸ் நகரில் பேஸ் பால் உள்ளூர் விளையாட்டு தொடரில் வெற்றிபெற்ற  கன்சாஸ் அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வெற்றி பேரணியை நேற்று புதன் கிழமை நடத்தினர். அந்த பேரணியின் போது திடீரென மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். பேரணியில் திடீரென நடைபெற்ற இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இந்த துப்பாக்கி சூட்டில் டிஜேயாக வேலை செய்து வந்த லிசா … Read more

அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர் சடலமாக மீட்பு.!

Indian student Neel Acharya died in USA

அமெரிக்காவில் டிப்பேகானோ கவுண்டியில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் கணினி மென்பொருள் படிப்பை பயின்று வந்துள்ளார் இந்திய மாணவர் நீல் ஆச்சார்யா. இவர் கடந்த ஞாயிற்று கிழமை முதல் காணாமல் போயுள்ளார். இதுகுறித்து அவரது தயார் கௌரி ஆச்சார்யா , தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில் , ”  எங்கள் மகன் நீல் ஆச்சார்யா ஜனவரி 28ஆம் தேதி முதல் காணவில்லை, அவர் அமெரிக்காவில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவரை கடைசியாக தனியார் … Read more

முதல்வரின் வெளிநாட்டு பயணம்… எந்தெந்த நாடுகளுக்கு.? எப்போது தொடக்கம்.? 

Tamilnadu CM MK Stalin

கடந்த வருடம் மே மாத இறுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் , ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். தமிழகதிற்கு 1 டிரில்லியன் அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க  முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொண்டார். அப்போது அந்நாட்டு தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து இந்த வருட தொடக்கத்தில் சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் பல்வேறு  தொழில் முதலீடுகளை கொண்டுவர பன்னாட்டு நிறுவனங்கள் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டன. இதனை … Read more

அமெரிக்காவுக்கு சட்டவிரோத குடியேற்றம்… 21 குஜராத்தியர்களுக்கு சிக்கல்… ஏஜென்ட்களுக்கு வலைவீச்சு.!

Illegal immigration - 21 Gujarat Passengers

கடந்த வியாழன் அன்று ஐக்கிய அரபு நாட்டில் இருந்து அமெரிக்காவில் உள்ள நிகரகுவா எனும் இடத்திற்கு 303 பயணிகள் உடன் தனியார் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பயணித்த 303 பயணிகளில் 299 பேர் இந்தியர்கள் என்றும், 11 சிறார்கள் அந்த விமானத்தில் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த விமானமானது எரிபொருள் நிரப்பும் பொருட்டு பாரிஸில் இருந்து 150 கிமீ தொலையில் வத்ரி எனும் விமான நிலையத்தில் நின்றுள்ளது. அப்போது அந்த விமானநிலைய அதிகாரி பயணிகளின் … Read more

காஸா மீதான தாக்குதலை குறைத்திடுங்கள்.! இஸ்ரேலிடம் வலியுறுத்திய அமெரிக்கா.!

Israel Hamas War - US says

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் கடந்த இரு மாதங்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதில் இஸ்ரேல் தரப்பில் முதலில் 1200 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு இஸ்ரேல் ராணுவம் , ஹமாஸ் அதிகம் இருக்கும் காஸா நகர் மீது நடத்தி வரும் பல்முனை தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் இதுவரை 18000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் என்பது வருத்தத்திற்குரிய தகவல். ஹமாஸ் இல்லாமல் காசா இல்லை.! பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்.! ஹமாஸ் … Read more

வேலை கிடைக்காத விரக்தி.. 3 பேரை சுட்டுக்கொன்ற அமெரிக்கா பேராசிரியர்.! லாஸ் வேகாஸ் உண்மைகள்….

Anthony Polito - University of Nevada Las Vegas

கடந்த டிசம்பர் 6 புதன் கிழமை அன்று, அமெரிக்கா, கலிபோர்னியாவில், லாஸ் வேகாஸ் பகுதியில் உள்ள UNLV  பல்கலைக்கழக வளாகத்தில் பிசினஸ் கல்லூரியில் ஒரு மர்ம நபர் துப்ப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். தாக்குதல் நடத்திய மர்ம நபரும் உயிரிழந்தார். இந்த துப்பாக்கி சூடு பற்றி தீவிர விசாரணை மேற்கொண்ட கலிபோர்னியா காவல்துறையினர் பல்வேறு தகவல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். அதில்,துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததில் இருவர் வணிக பேராசிரியர்கள். அவர்கள்,  பாட்ரிசியா … Read more

அமெரிக்க பல்கலைக்கழத்தில் துப்பாக்கிசூடு.! 4 பேர் உயிரிழப்பு.! 

US Las Vegas - Nevada

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் என்பது அவ்வப்போது அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் குறிப்பாக கல்வி நிலையங்களில் இந்த துப்பாக்கி சூடு என்பது சமீப காலமாகவே பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்தும் இந்த சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் (UNLV) உள்ள நெவாடா பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் நேற்று ( புதன்கிழமை) ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் 3 பேர் … Read more