அமெரிக்க நாட்டின் பாஸ்டன் நகரத்தில் இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் நடைபெற்ற முதல் இந்திய தின அணிவகுப்பின் போது, பாஸ்டனில் 220 அடி உயர அமெரிக்க-இந்தியக் கொடி வானத்தில் பறந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் ஏராளமான மிதவைகள், படைவீரர்களின் இசைக்குழுக்களின் தேசபக்தி பாடல்களுக்கு மத்தியில், இந்திய தின அணிவகுப்பில் 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
“பாஸ்டனில் நடந்த முதல் இந்திய தின அணிவகுப்பு ஒரு வரலாற்று வெற்றியாகும். அனைத்து பெருமையும் நகரத்தில் உள்ள இந்திய-அமெரிக்கர்களுக்கும், இரவு பகலாக உழைத்த தன்னார்வலர்களுக்கும் உரித்தானது” என்று சமூக தலைவர் அபிஷேக் சிங் கூறினார்.
“அமெரிக்காவின் சுதந்திரப் போராட்டத்தை துவக்கியதற்காக போஸ்டன் அறியப்படுகிறது. எனவே, இந்த வரலாற்று நகரத்தில் இதை பிரமாண்டமாக கொண்டாட முடிவு செய்தோம்,” என்று அவர் கூறினார்.