அமெரிக்க பல்கலைக்கழத்தில் துப்பாக்கிசூடு.! 4 பேர் உயிரிழப்பு.! 

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் என்பது அவ்வப்போது அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் குறிப்பாக கல்வி நிலையங்களில் இந்த துப்பாக்கி சூடு என்பது சமீப காலமாகவே பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்தும் இந்த சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் (UNLV) உள்ள நெவாடா பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் நேற்று ( புதன்கிழமை) ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் துப்பாக்கி குண்டு காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காஸாவின் முக்கிய நகரத்தை தாக்கிய இஸ்ரேலிய இராணுவம்.. ஏராளமானோர் பலி!

துப்பாக்கி சூடு சம்பவம் அறிந்ததும், சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் , கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர்களை வெளியேற்றினர். அதன் பிறகு சம்பவ இடத்தை ஆராய்ந்த போது 3 பேர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததும் , துப்பாக்கி சூடு நடத்தியவர் உயிரிழந்ததும் தெரிய வந்தது. ஒருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கி சூடு நடத்தியவர் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது காவல்துறையினரால் சுடப்பட்டாரா என்பது தெளிவாக தெரியவில்லை. இந்த சம்பவத்தை அடுத்து, நெவாடா பல்கலைக்கழகம் மற்றும் அனைத்து தெற்கு நெவாடா பகுதி நிறுவனங்களும் நேற்று முழுவதும் மூட உத்தரவிடப்பட்டது. நிறுவனம் அருகே உள்ள சாலைகளையும் போலீசார் மூடினர்.

இந்த சம்பவம் குறித்து கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில், திடீரென துப்பாக்கி சூடு சட்டம் கேட்டது . 7,8 குண்டுகள் பாய்ந்த சத்தம் கேட்டது. நாங்கள் பாதுக்காப்பான இடத்தை நோக்கி ஓடினோம் என தெரிவித்தார். UNLV பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 25,000 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 8,000 முதுகலை பட்டதாரிகள் பயின்று வருகின்றனர்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.