ஸ்பீடா போக உங்களுக்கான வாய்ப்பு! நகர்ப்புறங்களில் வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பு அதிகரிப்பு!

மத்திய அரசு நகர்ப்புறங்களில் வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பை அதிகரிக்க  ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது பல்வேறு நகரங்களில் உள்ளூர் நிர்வாகங்கள் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் என்பதை வேகக் கட்டுப்பாட்டு வரம்பாக வைத்துள்ளன. இந்நிலையில் நகர்ப்புறங்களில் ரிங் ரோடுகள், சாலை விரிவாக்கத் திட்டங்கள் உள்ளிட்டவை அதிகரித்துவரும் நிலையில் வேகக் கட்டுப்பாட்டு வரம்பை உயர்த்த மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முடிவுசெய்தது.

அதன்படி நகர்ப்புறங்களில் கார்கள் அதிகபட்சமாக மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்திலும், கனரக வாகனங்கள் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இரு சக்கர வாகனங்கள் 50 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வரம்பை மாநிலங்களும் உள்ளூர் நிர்வாகங்களும், உள்ளூர் பாதுகாப்புச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப குறைத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment