வசூல் மட்டுமல்ல, விருது வாங்குவதிலும் கெத்து காட்டி நிற்கும் மெர்சல்

தளபதி விஜயும், இயக்குனர் அட்லியும் தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து இணைந்த திரைப்படம் மெர்சல். இப்படம் தீபாவளியன்று வெளியாகி மாபெரும் வெற்றியடைந்து வசூல் சாதனைகள் புரிந்தது. இப்படம் விஜயின் திரைபயனத்தில் ஒரு மைல்கல்.

இப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து அசத்தி இருப்பார். இப்படத்தை இயக்குனர் அட்லி நல்ல கருத்துகளுடன் கதையை நகர்த்தி இருப்பார். இதனால் இதற்க்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி தமிழக மக்களிடமும் பெரும் வரவேற்ப்பை பெற்றது.

சமீபத்தில் நடந்த எடிசன் விருது விழாவில் இது தெரிந்தது. சிறந்த இயக்குனராக அட்லியும், சிறந்த ஒளிபதிவாளராக விஷ்ணுவும் ( இவருக்கு இதுதான் முதல் படம்) சிறந்த கலை இயக்குனர் விருது முத்துராஜ்க்கும், சிறந்த பாடலாசிரியர் விருது விவேக்கிற்கும், சிறந்த வில்லனாக SJ.சூர்யாவிற்கும், சிறந்த பின்னணி பாடகர் விருது சத்ய பிரகாஷ்க்கும், சிறந்த நடன இயக்குனர் விருது ஷோபி மாஸ்டருக்கும் கொடுக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment