IPL 2018:நமக்கு சிஎஸ்கே போட்டி முக்கியம் இல்ல …!நமக்கு இது தான் முக்கியம் …!

காவிரி பிரச்னை தொடர்பாக பல வழிகளில் போராடி  நம் ஒற்றுமையை வெளிப்படுத்தி வருகிறோம். நான் ஒரு யோசனை சொல்கிறேன். சிலர் இதை விரும்பாமல் இருக்கலாம். யோசித்து முடிவெடுங்கள்.

சிஎஸ்கேவின் முதல் ஆட்டம் ஏப்ரல் 10-ம் தேதி நடைபெறவுள்ளது. 50,000 இருக்கைகள் கொண்ட சேப்பாக்கம் மைதானம் காலியாக இருந்தால் அது சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும். உலகளவில் தொலைக்காட்சியில் அதைப் பார்ப்பார்கள். ஒரு ரூபாய் செலவழிக்காமல் இதைச் செய்துகாட்ட முடியும். சிறு தியாகத்தின் வழியாக.

ஜூன் 12-ம் தேதி ஒவ்வொரு வருடமும் மேட்டூர் அணை திறக்கப்படும். இந்த வருடமும் அதேபோல திறக்கப்படுமா எனத் தெரியாது. இந்தப் பிரச்னை தீருமா அல்லது சுயநலம்மிக்க அரசியல்வாதிகள் இதைத் தீர்ப்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி. இதற்கெதிராக நாம் போராடி ஒரு முடிவை நாம் உருவாக்கவேண்டும்.ஜல்லிக்கட்டுப் போராட்டம் நமக்கு ஒரு முன்னுதாரணம்.

ஒரே ஒரு ஆட்டத்துக்குச் செல்வதைத் தவிர்த்து விடுங்கள் என்று யோசனை கூறுகிறேன். இதன்மூலம் நம் போராட்டத்துக்கு வலு சேர்க்கமுடியும்.இதை விவசாயிகளின் பிரச்னையாகக் காண வேண்டாம். நம் வாழ்வின் முக்கியப் பிரச்னை. உணவு உற்பத்தியின் பிரச்னை.

இதைத் தமிழர்களின் பிரச்னை என்றாகவும் பார்க்கக்கூடாது. தமிழ்நாட்டில் வசிக்கும் அனைவருடைய பிரச்னை இது. நீங்களும் எங்களுக்கு ஆதரவாக நிற்கவேண்டும். இது மொழிப்பிரச்னை அல்ல. வாழ்க்கைப் பிரச்னை. உங்களுக்கு உணவு வழங்கும் விவசாய நிலங்கள் எதிர்கொள்ளும் பிரச்னை. தேவையான நீர் இல்லாவிட்டால் அது உணவு உற்பத்தியைப் பாதிக்கும். இது பொருளாதாரத்தையும் பாதிக்கும், உங்களுடைய வியாபாரத்தையும் பாதிக்கும்.

ஒரே ஒரு ஆட்டத்துக்குச் செல்ல வேண்டாம் என்று கோரிக்கை வைக்கிறேன். அந்த ஆட்டத்தை வீட்டில் பாருங்கள். 50,000 பேரின் தியாகம் 7 கோடி மக்களுக்கு வாழ்நாள் முழுக்க உதவும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment