வேலையின்மை குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி…மத்திய அரசு அதிரடி…!!

10

மோடி ஆட்சியில் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மத்திய அரசு துறைகளில் மத்திய அரசு பணியில்  3  லட்சத்து 79 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது  என்று  இடைக்கால பட்ஜெட்டில் வெளியான புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதே போல ரயில்வே துறை ,  காவல்துறை  நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பு துறையில் அதிகளவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நிதி ஆயோக் அமைப்பின் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் நாட்டில் வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவற்றிற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது