இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் – ராகுல் காந்தி

ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை எங்கே? – காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி. கர்நாடக மாநிலம் பல்லாரியில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவேன் என்று பிரதமர் கூறினார். அந்த வேலைகள் எங்கே போனது? மாறாக கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையிழந்துள்ளனர். கர்நாடகாவில் 2.5 லட்சம் அரசுப் பணியிடங்கள் … Read more

இளைஞர் வேலைவாய்ப்பின்மை 25.5%-ஆக உயர்வு..!

நாட்டில் வேலைவாய்ப்பு நிலவரம் குறித்து பீரியாடிக் லேபர் ஃபோர்ஸ் சர்வே வெளியாகியுள்ளது. அதன்படி, நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களான 2021 ஏப்ரல்,மே மற்றும் ஜூன் வரை 22 மாநிலங்களில் எடுக்கப்பட்ட ஆய்வில் நகர்ப்புற இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை சராசரி 25.5% ஆக இருந்தது. அதில், தமிழகத்தில் நகர்ப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மை 28.5%-ஆக இருந்தது. பெண்களிடம் வேலைவாய்ப்பின்மையில் 67 சதவிகிதத்தோடு காஷ்மீர் முதல் இடத்திலும்,  59 சதவிகிதத்தோடு கேரளா இரண்டாம் இடத்திலும் இருந்தன. அசாம், ராஜஸ்தான் மாநிலங்களில் பெண்களுக்கான … Read more

இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ. 3,000 வழங்கப்படும் – கெஜ்ரிவால் அறிவிப்பு..!

கோவாவில் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ.3,000 வழங்கப்படும் என கெஜ்ரிவால் அறிவித்தார். கோவாவில் உள்ள பனாஜியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால், கோவாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று கட்சி ஆட்சிக்கு வந்தால் இளைஞருக்கும வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ.3000 வேலையில்லா உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்தார். டெல்லி மக்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம்கிடைக்கிறது. … Read more

இந்தியாவுடன் ஒப்பிடுகையில் மேற்கு வங்கத்தில் வேலையின்மை குறைவு- மம்தா பானா்ஜி.!

மேற்கு வங்கத்தில் ஜூன் மாதத்தில் காணப்பட்ட வேலையின்மை விகிதம், இந்தியாவுடன் ஒப்பிடுகையில் குறைவு என மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா். கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக பல நிறுவனங்கள் மூடப்பட்டதால் பலா் வேலையிழந்தனா். இதனால், நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்தது. தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா பாதிப்புக்கு ஏற்றாற்போல பல வகையான தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதனால் வேலையின்மை குறைந்து வருகிறது. சமீபத்தில், … Read more

வேலையின்மை குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி…மத்திய அரசு அதிரடி…!!

மோடி ஆட்சியில் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மத்திய அரசு துறைகளில் மத்திய அரசு பணியில்  3  லட்சத்து 79 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது  என்று  இடைக்கால பட்ஜெட்டில் வெளியான புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதே போல ரயில்வே துறை ,  காவல்துறை  நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பு துறையில் அதிகளவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நிதி ஆயோக் அமைப்பின் தேசிய மாதிரி … Read more

வேலையில்லா திண்டாட்டம் பொய்….நிதி ஆயோக் மறுப்பு அறிக்கை…!!

நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற சூழலில் வேலையின்மை குறித்து வெளியான சர்வே தவறானது என நிதி ஆயோக் மறுப்பு தெரிவித்துள்ளது. வேலையின்மை குறித்து தேசிய மாதிரி நிறுவனம் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின் முடிவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த 2017-18ம் ஆண்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாகவும் , அந்த விகிதம் 6.1 சதவீதமாக அதிகரித்து இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. மேலும் அந்த ஆய்வறிக்கையில் கடந்த 1972-73ம் ஆண்டு நிலவிய வேலையின்மைக்கு சமமாக இந்த ஆண்டிற்க்கான வேலையின்மை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அந்த வேலையின்மை அறிக்கையில் மேலும் சொல்லப்பட்டதில் நகர்ப் … Read more

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் வேலையின்மை குறித்து சர்வே வெளியீடு..!!

நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற சூழலில் வேலையின்மை குறித்த சர்வே வெளியிடப்பட்டுள்ளது. வேலையின்மை குறித்து தேசிய மாதிரி நிறுவனம் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின் முடிவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த 2017-18ம் ஆண்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாகவும் , அந்த விகிதம் 6.1 சதவீதமாக அதிகரித்து இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. மேலும் அந்த ஆய்வறிக்கையில் கடந்த 1972-73ம் ஆண்டு நிலவிய வேலையின்மைக்கு சமமாக இந்த ஆண்டிற்க்கான வேலையின்மை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அந்த வேலையின்மை அறிக்கையில் மேலும் சொல்லப்பட்டதில் நகர்ப் புறங்களில் வேலையின்மையின் அளவு 7.8 சதவீதமாகவும், … Read more

பொதுத்துறை வங்கிகள் இணைப்பால் வேலையிழப்பு ஏற்படாது – அருண் ஜேட்லி

பொதுத்துறை வங்கிகள் இணைப்பதால் வேலையிழப்பு ஏற்படாது, என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கமளித்துள்ளார். விஜயா வங்கி, தேனா வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகியவற்றை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பாக மக்களவையில் பேசிய அருண் ஜேட்லி, வங்கிகள் இணைக்கப்படுவதால், கடன் அளிக்கும் நடைமுறை செலவுகள் வெகுவாக குறையும் என்றார். பொதுத்துறை வங்கிகளில், 11 வங்கிகள் வாராக்கடன் சுமையில் சிக்கித் தவிப்பதாக குறிப்பிட்ட அவர், அதை சரி செய்யவே வங்கிகள் இணைப்பு என கூறினார். … Read more