உ.பி_யில் கள்ளச்சாராயம் குடித்து 97 பேர் பலி…!!

12

வட மாநிலங்களில் கள்ளச்சாராயம் என்பது கட்டுப்படுத்த முடியாத ஒன்றாக இருந்து வருகின்றது.சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 97 பேர் வரை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கள்ளச்சாராயம் கும்பலை பிடிக்க ஐந்து பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை உத்தரப்பிரதேச அரசு நியமனம் செய்துள்ளது. இதுதொடர்பாக 31 சாராய வியாபாரி உட்பட 215 பேரை மொத்தம் கைது செய்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவிஅளிக்கப்பட்டுள்ளது.மேலும் பல்வேறு இடங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 50 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது