கிருஷ்ணகிரியில் பிகில் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சி இல்லாததால் ரசிகர்கள் வன்முறை..!

பிகில் திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று “பிகில்” திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. “பிகில்”  திரைப்படத்திற்கு சிறப்புக் காட்சிகள் வழங்க முடியாது என கூறியிருந்த நிலையில் இறுதியாக அரசு நிபந்தனை பெற்றபின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 5 மணிக்கு  சிறப்பு காட்சியில் தமிழகத்தில் வெளியிடப்பட்டது. ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிகில் திரைப்படத்தின் சிறப்பு சிறப்புக் காட்சிகள் வெளியிடவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் கோபத்தின் உச்சிக்குச் சென்றனர். கோபமடைந்த … Read more

இரண்டாவதும் பெண் குழந்தை..!பேத்தியை பூச்சி மருந்து கொடுத்து கொன்ற பாட்டி ..!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கூலித்தொழிலாளி ராஜா உள்ளார். இவரது மனைவி சத்யா இவர்களுக்கு 3 வயது பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் பாரூர் அரசு மருத்துவமனையில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை   பிறந்துள்ளது. இரண்டாவதும் பெண் குழந்தை என்பதால் ராஜாவின் தாய் பொட்டியம்மாள் கோபமடைந்தார்.  இதை தொடர்ந்து  குழந்தையும் , தாயும் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்தனர். வீட்டிற்கு வந்து இரண்டு மாதங்கள் பின்னர் ஒருநாள் சத்யா துணி துவைக்க சென்று … Read more

சஸ்பெண்ட்: வகுப்பறையில் குடிபோதையில் மயங்கி விழுந்த ஆசிரியர் !

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அடுத்த பனகமுட்லு கிராமத்தை சார்ந்த செல்வம் (45) இவர் காவேரிபட்டணம் அருகே உள்ள சந்தாபுரம்  ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கடந்த 12 வருடங்களாக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். செல்வத்திற்கு பல ஆண்டுகளாக குடிக்கும் பழக்கம் உள்ளதால் மாதத்தில் பாதி நாள்கள் பள்ளிக்கு  வராமல் இருந்தார்.  இதனால் ஆறு மாதத்திற்கு முன் ஊதிய உயர்வை குறைத்து வட்டார கல்வி அலுவலர் எச்சரிக்கை கடிதம் கொடுத்து உள்ளார். ஆனால் தொடர்ந்து செல்வம் குடிப்பதை நிறுத்தாமாலும் மீண்டும் … Read more

ஹெல்மெட்டிற்குள் வைத்து போன் பேசும் நபரா நீங்கள்?? இதோ உங்களுக்கு ஒரு எச்சரிக்கை

கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனத்தில் செல்லும் பொது, ஹெல்மெட்டில் இருந்த போன் வெடித்ததால் இளைஞர் படுகாயம் அடைந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ள ஓசூர் அடுத்த உள்ள புளியரசி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம். 40 வயதான இவர், தனது வேலை காரணமாக ஓசூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். சூளகிரி அருகே சென்ற பொது, அவருக்கு போன் வந்தது. அதனை எடுத்து அவர் தனது ஹெல்மெட்டில் வைத்து பேசினார். அப்பொழுது அவர் ஹெல்மெட்டில் இருந்த செல்போன் வெடித்தது.இதனால் அவர் தலை மற்றும் … Read more

ஹெல்மட் அணியாவிட்டால் இந்த ஊர் முக்கிய சாலைகளில் பைக்கில் செல்ல முடியாது!

சாலையில் ஹெல்மெட் போடாத காரணத்தால் விபத்துகளின் போது நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனை கட்டுப்படுத்த சாலை விதிகளில் பல கட்டுப்பாடுகள் விதித்தும். இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவருமே ஹெல்மெட் அணிய வேண்டும் என புதிய உத்தரவுகளை பிறப்பித்தது. இந்நிலையில் ஓசூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிய புதிய யுத்திகளை கையாண்டு வருகிறது. இதன்படி, ஓசூர் முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது ஹெல்மெட் அணியாவிட்டால், அவர்களை அந்த முக்கிய சாலைகளில் போலீசார் … Read more

கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் மத்திய நீர்வளத்துறை குழுவினர் ஆய்வு…!!

கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் மத்திய நீர்வளத்துறை குழுவினர் 7 பிரதான மதகுகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். கிருஷ்ணகிரி அணையின் இடதுபுற பிரதான மதகு ஒன்று கடந்த ஆண்டு உடைந்ததால் 2 கோடி ரூபாய் செலவில் மாற்றி அமைக்கப்பட்டது. உடைப்பு ஏற்பட்ட மதகு மாற்றப்பட்ட போதிலும் மீதமுள்ள 7 மதகுகள் பலவீனமாக இருப்பதால் கிருஷ்ணகிரி அணையில் 52 அடிக்கு பதிலாக 40 அடி வரை மட்டுமே நீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதனிடையே, இந்த மதகுகளை மாற்றியமைக்க மத்திய … Read more

கிருஷ்ணகிரியிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு..!!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை பகுதிக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் அனுப்பி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, நிவாரணப் பொருட்களை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கி வருகின்றனர். பெறப்படும் நிவாரணப் பொருட்கள் லாரிகள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பபடுகிறது. அந்த வகையில், பால் பவுடர், போர்வை, தண்ணீர் பாட்டில்கள், அரிசி மூட்டைகள், … Read more

ரூபாய் 18,00,000 மதிப்புள்ள குட்கா பொருள் பறிமுதல்..!!

கிருஷ்ணகிரி அருகே 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யபட்ட குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி காவல்துறையினர் நேற்று வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது புலியரசி என்ற பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த, லாரியை போலீசார் சோதனை செய்தனர். அதில் அடுக்கடுக்காக அட்டை பெட்டிகளில் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாரியுடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், லாரி உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட குட்கா … Read more

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி நீர்த்தேக்கத்தின்  மதகுகளை மாற்றியமைப்பதற்கான டெண்டரை எதிர்த்து தொடர்ந்த மனு தள்ளுபடி !

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி நீர்த்தேக்கத்தின்  மதகுகளை மாற்றியமைப்பதற்கான டெண்டரை எதிர்த்து தொடர்ந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக மணிவேல் என்பவர் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி நீர்த்தேக்கத்தின் மதகுகளை மாற்றியமைப்பதற்கான ரூ.3 கோடி மதிப்பிலான டெண்டருக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்தார் .அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம்  மனுவை தள்ளுபடி செய்தது . மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் முன் தாய், மகள் தீக்குளிக்க முயற்சி!

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் முன்  தாய், மகள் தீக்குளிக்க முயற்சி செய்தனர். கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் முன்பு தாய், மகள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.பின்னர்  சோக்காடி கிராமத்தைச் சேர்ந்த வளர்மதி, அவரது தாய் தாதம்மாள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தங்களது வீட்டை வெங்கடசாமி என்பவர் அபகரிக்க முயல்வதாக குற்றச்சாட்டை முன் வைத்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.