பவானிசாகர் அணையில் இருந்து மேலும் 15 நாட்களுக்கு நீர் திறப்பு…!!

பவானிசாகர் அணையில் இருந்து மேலும் 15 நாட்களுக்கு கூடுதலாக நீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் மூலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கருர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் 1 ம் தேதி கீழ்பவானி வாய்க்கால் ஒற்றைப்படை மதகுகள் வழியாக விநாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடைமடைப்பகுதியில் நெற்பயிர்கள் களையெடுக்கும் பருவத்தில் … Read more

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் மீன் பிடிக்க மீன்வளத்துறை அனுமதி….!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில், கட்டலாம், லோகு, மிருகால் ஆகிய ரக மீன் குஞ்சுகள் மிதவை கூண்டு மூலம் வளர்க்கப்பட்டன. தற்போது 3 மாதங்களான நிலையில், மீன்வளத்துறை மீன்பிடிக்க அனுமதி அளித்தது. இந்நிலையில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜாகிருஷ்ணன், மீன்பிடிப்பு பணியை துவக்கி வைத்தார். இதனைதொடர்ந்து, அந்தியூர் மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உள்ள 8 குழுக்களின் மூலம், மீன் பிடித்து விற்பனை செய்யப்படும்.

"100 அடியை தொட்ட பவானி சாகர்"அணை…!!

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில் 2ஆவது முறையாக 100 அடியை எட்டியுள்ளது.கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது. பவானிசாகர் அணை ஈரோடு மிக மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்குகின்றது. இந்த அணையினால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2 இலட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்று வருகின்றன. அணையின் நீர்மட்டம் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நிலையில் குறையத் தொடங்கியது. இந்நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக … Read more

காதலியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் நடந்த சுற்றுலாவில் விபரீதம்…!!

ஏற்காட்டில் காதலனை தாக்கி அவரது காதலியை கடத்தி பாலியல் பாலத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர். ஈரோட்டை சேர்ந்த வாசுதேவன் என்பவர் தனது காதலியுடன் ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், காதலி விடுதியில் இருந்து வெளியேறி உள்ளார்.அவரை தேடி வாசுதேவனும் வந்துள்ளார். இவர்களை பின்தொடர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜியக்குமார் மற்றும் கார் ஓட்டுநர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் வாசுதேவனை தாக்கி அவரிடம் இருந்து பணத்தை பறித்துள்ளனர்.பின்னர் வாசுதேவனின் காதலியை சேலத்தில் இறக்கி விடுவதாக … Read more

18 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு ..! கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு..!அனைவரும் விடுதலை..!அதிரடி தீர்ப்பு

 கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து கோபிச்செட்டிப்பாளையம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2000-ஆம் ஆண்டு ஜுலை 30 ஆம் தேதி அன்று  கன்னட நடிகர் ராஜ்குமார் ஈரோடு அருகே தாளவாடி தொட்டகஜனூரில் உள்ள  தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அப்போது, வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு பின்னர் சில நாட்கள் கழித்து விடுவிக்கப்பட்டார். வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், மல்லு, மாறன், கோவிந்தராஜ் என்கிற இனியன், அன்றில் என்கிற … Read more

ஈரோட்டில் ஏற்பட்ட வெள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தம்!

ஈரோட்டில் உள்ள பவானிசாகர் வனச்சரகத்திற்குட்பட்ட மோயாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தபட்டுள்ளது.சுஜில்குட்டை வழித்தடத்தில் மோயாற்றை கடக்க வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மோயாற்று கரை பகுதிகளில் ரோந்து மேற்கொள்ள வனத்துறைக்கு மாவட்ட வன அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளனர். DINASUVADU

பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட  உத்தரவு …!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து, பாசனத்திற்காக 1.8.2018 முதல் 28.11.2018 முடிய 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட  உத்தரவிட்டுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ஈரோடு அருகே கொடுமுடி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் நிரம்பி வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை !

ஈரோடு அருகே நீர்த்தேக்கத்தில் தண்ணீர் நிரம்பி வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் உள்ள  கொடுமுடி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் நிரம்பி வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு வெள்ள முன்னறிவிப்பு தொடர்பாக மத்திய நீர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ஈரோட்டில் பாசனத்திற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தண்ணீரை திறந்து வைத்தார்!

ஈரோட்டில் பாசனத்திற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தண்ணீரை திறந்து வைத்தார். அமைச்சர் செங்கோட்டையன், ஈரோட்டில் உள்ள  பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால் ஆகியவற்றின் கீழ் பாசனம் பெறும் நிலங்களுக்கு, முதல் போக பாசனத்திற்காக  தண்ணீரை திறந்து வைத்தார் மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

முதலமைச்சர் பழனிசாமி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவு!

முதலமைச்சர் பழனிசாமி  ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவிட்டுள்ளார். ஜூலை 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் கால்வாய் பாசனத்திற்கு நீர் திறக்கவும், நீர் திறப்பின் மூலம் 40,247 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.