திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் புதியக் கட்டிடத்தில் எல்ஐசி பணிகள் துவக்கம் ..!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் எல்ஐசி கிளை அலுவலகம் வத்தலக்குண்டு திண்டுக்கல் சாலையில் இயங்கி வந்தது அந்தக் கட்டிடத்தில் போதிய இட வசதி இல்லாதால் நவீன மயமாக்கப்பட்ட கட்டிடம் வத்தலக்குண்டு பெரியகுளம் சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரிகளால் துவக்கி வைக்கப் பட்டது அந்த கட்டிடத்தில் பல பராமரிப்பு பணிகள் நிறைவடையாத நிலையில் அனைத்து பணிகளும் முடிவடைந்து திங்கள் முதல் புதிய கட்டிடத்தில் பணிகள் துவங்கப் பட்டன.; முகவர் தண்டபாணிக்கு காசாளர்பிரிமியத ;தவணைக்கான முதல் ரசீதை வழங்கினார் … Read more

திண்டுக்கல்லில் பேருந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்றவருக்கு நிகழ்ந்த விபரீதம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த போது அதில் சிக்கி இருந்தவர்களுக்கு உதவச் சென்ற கேரள வியாபாரி, அதே இடத்தில் மற்றொரு பேருந்து விபத்துக்குள்ளானதில் உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த விபத்துகளில் வியாபாரி உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இன்று அதிகாலை கேரளா மாநிலம் பத்தினம் திட்டாவிலிருந்து பெங்களூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து வேடசந்தூர் அருகே தம்மனம்பட்டி தேசியநெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து … Read more

நான்கு தலைமுறைகளை கடந்த மூதாட்டியின் 104வது பிறந்தநாய்விழா கேக் வெட்டி கொண்டாட்டம்..!

வாடிப்பட்டியில் நான்கு தலைமுறைகளை கடந்த மூதாட்டியின் 104வது பிறந்தநாய்விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. வாடிப்பட்டி நீரேத்தான் கிராமத்தை சேர்ந்தவர் ராஜூப்பிள்ளை, திராவிடர் கழகத்தின் மூத்த முன்னோடியான இவரது மனைவி மீனாட்சியம்மாள். ராஜூப்பிள்ளை கடந்த சில ஆண்டுகள் முன் இறந்து விட்ட நிலையில் அவரது மனைவி மீனாட்சியம்மாள் நான்கு தலைமுறைகளை கடந்து 104 வயதாகியும் தனது மகன் பராமரிப்பில் நலமுடன் உள்ளார். அவரது 104வது பிறந்தநாள் விழா வாடிப்பட்டியில் விமர்சையாக கொண்டாடப்பட்டது, மூதாட்டியின் மகன், மகள்கள், பேரன், பேத்திகள், … Read more

நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ஒரே கிராமத்தில் அம்மை நோய் பாதிப்பு…!

ஒரே கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு திண்டுக்கல் மாவட்டத்தில்  அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மருத்துவக்குழுவை அனுப்பி சிகிச்சையளிக்க கோரிக்கை எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள நல்லம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பொதுவாக வெயில்காலம் தொடங்கும் போது, வெப்பநிலை மாறுபாட்டால் சின்னம்மை எனும் அம்மை நோய் பாதிப்பு ஏற்படும். இதே போன்றுதான் நல்லம்மநாயக்கன் பட்டி கிராமத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சின்னம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தெருக்களெங்கும் … Read more

திண்டுக்கல் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட திமுகவினர் சாலை மறியல் போராட்டம்…!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் சென்னையில் போராட்டம் நடத்திய ஸ்டாலினை கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பேருந்து நிலையம் அருகில் திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் பழநி திமுக எம்.எல்.ஏ  செந்தில்குமார் உட்பட 300க்கும் மேற்பட்ட திமுகவினர் சாலை மறியல் போராட்டம் மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீ கைது செய்தனர். மேலும் … Read more

பழனியில் வைக்கோல் ஏற்றிவந்த லாரி தீப்பிடித்தது…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் வைக்கோல் ஏற்றிவந்த லாரி தீப்பிடித்தது. அதிக உயரத்தில் வைக்கோல் ஏற்றிவந்தபோது தாழ்வான மின்கம்பி உரசியதில் தீப்பிடித்ததால் லாரி சேதம் அடைந்தது. தீயனைப்பு துறையினர் தீயை அனைத்து வருகின்றனர்.

திண்டுக்கல்லில் தாயும் மகளும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி

திண்டுக்கல் : வேடசந்தூர் பாளையம் அருகே, மகனை மீட்டு தரக்கோரி தாயும் மகளும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வான்ராயன்பட்டியை சேர்ந்த ஜெகஜோதி என்பவர் தனது மகன் குமரவேல் மைசூருக்கு வேலைக்கு போய் 3 மாதம் ஆகியும் என்ன நிலமை என தெரியவில்லை என்றும், மகனை வேலைக்கு அனுப்பிய புரோக்கர் மணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தீ குளிக்க முயற்சி செய்தார்கள்.

திருச்சியில் நத்தம்மாடிபட்டியில் விமர்சையாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி!

  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள நத்தம்மாடிபட்டியில் இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 300 காளைகளும் 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். வாடிவாசல் வழியாக சீறி வந்த காளைகளை மாடுபிடிவீரர்கள் திமிலை பிடித்து அடக்க முயன்ற போது மாடுபிடி வீரர்களுக்கு பிடியில் சிக்காமல் மாடுகள் துள்ளிச் சென்றன. காளைகளை அடிக்கிய மாடுபிடிவீரர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டு வருகின்றது. அதே போல் பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கபட்டது. சைக்கிள், அண்டா,  தங்க … Read more

திண்டுக்கலில் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு…!!

திண்டுக்கல் : பழனி அருகே பெரியகலையம்புத்தூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை. கட்டுபாடுகளை விதித்து வரும் 16 ம்தேதி நடத்த மாவட்ட ஆட்சியர் வீனய் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் காவல்துறையினர் இடையேயான விளையாட்டு போட்டி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் காவல்துறையினர் இடையேயான விளையாட்டு போட்டியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் மாவட்ட ஆட்சியர் வினய் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.