274 பேருடன் மும்பை அருகே நடுக்கடலில் மூழ்கிய கப்பல் – இதுவரை 51 பேரின் உடல்கள் மீட்பு!

மும்பை அருகேயுள்ள நடுக்கடலில் கப்பல் ஒன்று மூழ்கியதில் 86 பேர் மாயமாகி உள்ளனர். இதுவரை 51 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் நடுக்கடலில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் கிணறு அருகே என்னை துரக்கும் பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்த b-305 எனும் கப்பல் அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் கடந்த திங்கள் கிழமை இரவு கரையை கடக்கும் பொழுது கப்பல் நங்கூரத்தை இழந்துள்ளது. அதே நேரம் கடல் கொந்தளிப்பும் … Read more

காலதாமதம் செய்யாதீர்கள் – பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அறிவுறுத்தல்!

கொரோனா தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் எனவும் காலதாமதம் செய்யாதீர்கள் எனவும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்தியாவில் தினமும் புதிதாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா விவகாரத்தில் மத்திய அரசு முறையான நடவடிக்கைகளை கையாளவில்லை என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி ஆரம்பம் … Read more

இயல்பு நிலைக்கு திரும்பும் பிரான்ஸ் – ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு!

பிரான்சில் கொரோனா பரவல் குறைய ஆரம்பித்துள்ளதால், அங்கு விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளுக்கு தற்பொழுது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டிலும் கொரோனா பரவல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பதாக அதிகமாக தான் இருந்தது. ஆனால், தற்போது பிரான்சில் முன்பை விட குறைவாக குறைந்துள்ளது. அங்குள்ள மக்களில் 30 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பிரான்சில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளது. எனவே பிரான்ஸ் நாட்டில் உள்ள மக்கள் தற்பொழுது பழைய நிலைக்கு … Read more

அதிகரிக்கும் கொரோனா பரவல் – கோவாவில் மே 31 வரை நீட்டிக்கப்படும் ஊரடங்கு!

கொரோனாவின் பாதிப்பு கோவாவில் அதிகரித்து வரும் நிலையில், மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது வீரியத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில் தினமும் இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். அதுபோல கோவாவிலும் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து கோவா … Read more

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு!

இலங்கையில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் கொரோனா தாக்கும் பொழுது அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சில சிறிய அளவிலான நாடுகள் அல்லது தீவுகளில் வசிக்கக்கூடியவர்கள் குறைந்த அளவிலான மக்கள் தொகை கொண்டிருப்பதால் கொரோனாவின் தாக்கம் அங்கு சற்று குறைவாக காணப்படுகிறது. ஆனால், 2.1 கோடி மக்கள் தொகை … Read more

மகாராஷ்டிராவில் மாவோயிஸ்டுகள் மற்றும் காவல்துறைக் இடையே துப்பாக்கிச் சண்டை – 13 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

மகாராஷ்டிர மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கட்சிரொலி எடப்பள்ளி வனப்பகுதியில் காவல்துறையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கு இடையே மோதல் நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் காவல்துறையின் சி-60பிரிவு காவல்துறையினர் இந்த மோதலில் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் நக்சலைட்கள் ஆதிக்கம் நிறைந்த எடப்பள்ளி பகுதியில் அவர்களின் ஆதிக்கத்தை ஒடுக்குவதற்காக காவலர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அப்பொழுது அதிகாலை 5.30 மணியளவில் காவல்துறையினருக்கு மாவோயிஸ்டுக்கும் நடந்த துப்பாக்கி சண்டை நடைபெற்றுள்ளது. … Read more

கார் மீது டிரக் மோதி விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!

உத்தரபிரதேச மாநிலத்தில் கார் மீது டிரக் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மிரான்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிக்ரேடா கிராமத்திற்கு அருகே டிரக் கார் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காரில் இருந்த மஞ்சு, அவரது மகன் மற்றும் அவரது மகள் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பிஜ்னோரிலிருந்து வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த கார் மீது டிரக் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக … Read more

கொரோனாவை மறந்து கொண்டாடப்பட்ட கோயில் திருவிழா – கிராமத்திற்கே சீல் வைத்த கர்நாடக அரசு!

கர்நாடகாவில் உள்ள கதக் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி கொண்டாடப்பட்ட கோவில் திருவிழாவால் ஒட்டுமொத்த கிராமத்திற்கும் கர்நாடக அரசு சீல் வைத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகளவில் காணப்படுவதால் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு விதிகளை மீறி கர்நாடக மாநிலத்திலுள்ள கதக் மாவட்டம் நற்குண்ட் அருகே … Read more

டாக்சி ஆம்புலன்ஸ் சேவை – தமிழக அரசை பாராட்டிய மத்திய சுகாதாரத்துறை!

தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் டாக்சி ஆம்புலன்ஸ் சேவைக்கு மத்திய சுகாதாரத்துறை பாராட்டு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக் கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். பல்வேறு மாநிலங்களிலும் கொரோனாவின் தாக்கம் அதிகளவில் காணப்படுவதுடன், தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனவே மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகம் காணப்படுவதால், ஆம்புலன்ஸ் சேவைகள் … Read more

அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை தொற்று நோய் – மதுரையில் 20 பேர் பாதிப்பு!

கொரோனா நோயாளிகளை தாக்கக்கூடிய கருப்பு பூஞ்சை தொற்று நோயால் மதுரையில் இதுவரை 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனராம். நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. கொரோனாவில் இருந்து மிகவும் கடினப்பட்டு மீண்டு வருபவர்களுக்கு தற்பொழுது மிகப்பெரும் சவாலாக கருப்பு பூஞ்சை நோய் தற்போது பரவி வருகிறது. இதன் மூலம் கண், காது, மூக்கு, தாடை பகுதியில் வீக்கம் ஏற்பட்டு பல் வலி … Read more