274 பேருடன் மும்பை அருகே நடுக்கடலில் மூழ்கிய கப்பல் – இதுவரை 51 பேரின் உடல்கள் மீட்பு!

மும்பை அருகேயுள்ள நடுக்கடலில் கப்பல் ஒன்று மூழ்கியதில் 86 பேர் மாயமாகி உள்ளனர். இதுவரை 51 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் நடுக்கடலில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் கிணறு அருகே என்னை துரக்கும் பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்த b-305 எனும் கப்பல் அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் கடந்த திங்கள் கிழமை இரவு கரையை கடக்கும் பொழுது கப்பல் நங்கூரத்தை இழந்துள்ளது. அதே நேரம் கடல் கொந்தளிப்பும் அதிகமாக இருந்ததால் இந்த கப்பல் கடலில் மூழ்கியுள்ளது. இதனையடுத்து இந்த கப்பலில் இருந்து 274 பேர் நடுக்கடலில் தத்தளித்த நிலையில், 188 பேர் மீட்கப்பட்டனர்.

மேலும் 86 பேரை மீட்கும் பணியில் கடற்படை, கடலோர காவல்படை, ஓஎன்ஜிசி நிறுவனத்தின் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவை இரவு பகலாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை 49 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், நேற்று இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளார். மாயமாகிய 86 பேரில் இதுவரை 51 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 35 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

எண்ணெய் துரக்கும் பணிக்காக அனுப்பப்பட்டிருந்த ஓஎன்ஜிசி நிறுவனத்தை சேர்ந்த தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 35 லட்சம் முதல் 75 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும் என ஓஎன்ஜிசி நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், அக்கப்பலின் கேப்டன் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது.

author avatar
Rebekal