அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…!

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, தன்ஜாய்,  சேலம்,நாகை, கன்னியாகுமரி, கரூர், புதுக்கோட்டை, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களிலும்   மழைக்கு … Read more

’24 மணிநேரம் மட்டுமே’ – பிரதமருக்கு கெடு விதித்த தெலுங்கானா முதல்வர்…!

தெலுங்கானா விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு உணவு தானியங்களை கொள்முதல் செய்ய பிரதமர் மற்றும் மத்திய உணவுத் துறை அமைச்சருக்கு 24 மணி நேரம் அவகாசம் கொடுப்பதாக தெலுங்கானா முதல்வர் தெரிவித்துள்ளார்.  தெலுங்கானா மாநிலத்தில் நடப்பு பயிர் பருவத்தில் 15 லட்சம் டன் புழுங்கல் அரிசியை கொள்முதல் செய்யக் கோரி, மத்திய அரசுக்கு தெலுங்கானா அரசு கோரிக்கை விடுத்திருந்த  நிலையில், இதனை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசை கண்டித்து, டெல்லியில் உள்ள தெலுங்கானா பவனில் … Read more

தேசிய அளவில் கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு முதல் பரிசு…!

கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு தேசிய அளவில் முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு தேசிய அளவில் முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 1 லிட்டர் டீசலுக்கு 5.8 கி.மீ. பேருந்துகளை இயக்கி டீசல் செயல்திறனில் சாதனை செய்ததற்காக கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது.

#BREAKING : புதுச்சேரியில் வரும் 16-ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை…!

புதுச்சேரியில் வரும் 16-ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் ஏப்ரல் 16- ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏப்ரல் 14-ல் தமிழ்ப் புத்தாண்டு, ஏப்ரல் – 15 ஆம் தேதி புனித வெள்ளியும் அனுசரிக்கப்படும் நிலையில் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து ஏப்ரல் 16-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு – அன்பில் மகேஷ்

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 47 லட்சத்திலிருந்து, 53 லட்சமாக அதிகரித்துள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.  சட்டப்பேரவையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 47 லட்சத்திலிருந்து, 53 லட்சமாக அதிகரித்துள்ளது. அரசு தொடக்கப்பள்ளிகளில் ரூ.150 கோடி செலவில், 7,500 திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், அரசு மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்ப பாடமாக பயிலும் மாணவர்களிடம் 2022 … Read more

அதிர்ச்சி : ஒரு வருடமாக 15 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி…! 6 பேர் கைது..!

கேரளாவை சேர்ந்த 17 வயது சிறுமி ஒரு வருடமாக 15 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.  இந்தியாவில் பெண் குழந்தைகள் முதல் முதிர் வயது பெண்கள் வரை தனியே வெளியே செல்வது என்றாலே, அவர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக தான் உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், இதனை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், தினமும் எங்கேயோ ஒரு பெண் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி கொண்டு தான் உள்ளனர். அந்த வகையில், கேரளாவை … Read more

இந்தியாவை பிடித்திருந்தால் அங்கேயே சென்று விடுங்கள் – இம்ரான்கானுக்கு எதிர்க்கட்சி தலைவர் அறிவுரை..!

உங்களுக்கு இந்தியாவை அவ்வளவு பிடித்திருக்கிறது என்றால், அங்கேயே நீங்களும் சென்றுவிடுங்கள் என இம்ரான்கானுக்கு மரியம் நவாஸ் அறிவுரை. நாட்டு மக்களிடையே நேற்று உரையாடிய பாக்.பிரதமர் இம்ரான்கான்,தான் நீதித்துறையை மதிப்பதாகவும், ஆனால்,உச்சநீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பு வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும்,குதிரை பேரத்தில் ஈடுப்பட்டுள்ளன எதிர்கட்சிகளின் செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் இம்ரான் கான் கூறினார். அதே சமயம், ஆட்சிக்கட்டிலிலிருந்து தன்னை இறக்க அமெரிக்கா துடிப்பதாகவும், சர்வதேச சாதிகளால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இம்ரான் கான் குற்றம் சாட்டினார். அமெரிக்காவால் … Read more

விரைவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவார் – அமைச்சர் மூர்த்தி

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நிச்சயமாக அமைச்சராவார் என உதயநிதி பேட்டி. மதுரையில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி  அளித்துள்ளார்.அப்போது பேசிய அவர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நிச்சயமாக அமைச்சராக வருவார். அவர் தனது தொகுதி மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சட்டமன்ற உறுப்பினராக தனது பணியை மிகவும் சிறப்பாக செய்துவரும் நிலையில், இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலமாக இருப்பார். அவர் கண்டிப்பாக விரைவில் அமைச்சராவார் என்று … Read more

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. மேலும், 29 பேர் … Read more

பிரான்ஸ் அதிபர் தேர்தல் – நாளை வாக்குப்பதிவு…!

பிரான்ஸ் அதிபர் தேர்தலை முன்னிட்டு  புதுச்சேரி,காரைக்கால், சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் நாளை வாக்குப்பதிவு. பிரான்ஸ் அதிபர் தேர்தலை முன்னிட்டு  புதுச்சேரி,காரைக்கால், சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தற்போதைய அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உட்பட 12 வேட்பாளர்கள் காலத்தில் உள்ளனர்.  தமிழகம்,கேரளா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் உள்ள 4,364 பிரெஞ்சு குடிமக்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். பிரெஞ்சு அதிபர் தேர்தல் நாளை முதல் சுற்றும், ஏப்-24-ஆம் தேதி 2-ஆம் சுற்றும் நடைபெறவுள்ளது.