581 கிலோ கஞ்சாவை சாப்பிட்ட எலி..! போலிஸாரின் அதிரடி அறிக்கை..! நடந்தது என்ன

581 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டு விட்டதாக நீதிமன்றத்தில் கூறிய காவல்துறையினர்.  உத்திரபிரதேச மாநிலம் மதுரா காவல் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 700 கிலோ கஞ்சாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நெடுஞ்சாலையில் நடத்திய மெகா கஞ்சா வேட்டையில் மதுரா காவல்துறை அதிகாரிகள் 581 கஞ்சாக்கள் கடத்தல் காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர். ஷெர்கர் காவல் நிலையத்தில் 386 கிலோ கஞ்சாவும், நெடுஞ்சாலை காவல் நிலையத்தில் … Read more

உங்களை நினைத்து வருத்தப்படுகிறோம் – எம்பி கனிமொழி

ஆளுநரை சிறப்பாக செயல்படுகிறார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அதிமுகவுக்கு சுயமரியாதை இல்லாமல் போய்விட்டது என எம்பி கனிமொழி பேச்சு. தூத்துக்குடி திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் எம்பி கனிமொழி அவர்கள் உரையாற்றினார். இந்த கூட்டத்தில் பேசிய அவர், மாநில சுயாட்சிக்கு, தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக செயல்படக்கூடிய ஆளுநரை சிறப்பாக செயல்படுகிறார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அதிமுகவுக்கு சுயமரியாதை இல்லாமல் போய்விட்டது. உங்களை நினைத்து வருத்தப்படுகிறோம் என விமர்சித்துள்ளார்.

கர்நாடகாவுக்கு ஒரு நியாயம் ? தமிழ்நாட்டுக்கு ஒரு நியாயமா?” – துரை வைகோ கேள்வி

கோவை குண்டுவெடிப்பு குறித்து அண்ணாமலையின் கருத்து குறித்து துரை வைகோ அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.  இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், பாஜக தலைவர் அண்ணாமலை கோவை குண்டுவெடிப்பு சம்பவம் பயங்கரவாத செயல் என போலீசார் கண்டுபிடித்த நிலையில் தமிழக அரசின் உளவுத்துறை கவன குறைவு காரணமாக தான் இவ்வாறு நடந்தது என்று குற்றம் சாட்டினார். இந்நிலையில் பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் மங்களூரில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஏற்கனவே அதே மாநிலத்தில் … Read more

போதை பொருள் வைத்திருப்பவருக்கு மரண தண்டனை – இலங்கை அரசு அறிவிப்பு

இலங்கையில் போதை பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசு அறிவிப்பு.  போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் வண்ணம் இலங்கை அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் போதை பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போதை பொருள் வைத்திருப்பதற்கு மரண தண்டனை விதிக்கும் சட்டமானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

பிரியா மரணம் தொடர்பான நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறாரா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பிரியா மரணம் தொடர்பான நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறாரா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி.  அமைச்சர் .சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பிரியா மரணம் தொடர்பான நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணத்தில் வெளிப்படையான விசாரணை நடைபெறுகிறது. மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்பதால் துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மக்கள் மீது தமிழக அரசு மும்முனை தாக்குதல் – வாசன் குற்றசாட்டு

அரசு சொத்துவரி உயர்வு, பால்விலை உயர்வு, மின்கட்டண உயர்வு என மக்கள் மீது மும்முனை தாக்குதல் நடத்தியுள்ளது என வாசன் பேட்டி.  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள், சொத்துவரி உயர்வு, பால்விலை உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், அரசு சொத்துவரி உயர்வு, பால்விலை உயர்வு, மின்கட்டண உயர்வு என மக்கள் மீது மும்முனை தாக்குதல் நடத்தியுள்ளது. மழைநீர் வடிகால் பணிகள் சரியாக … Read more

தேவைப்பட்டால் ஆளுநரை சந்திப்பேன் – ஓபிஎஸ்

தேவைப்பட்டால் ஆளுநரை சந்திப்பேன் என ஓபிஎஸ் பேட்டி.  தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் செபுகாரை ன்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், சென்னை திரும்பிய ஓ. பன்னீர்செல்வத்திடம் ஆளுநரை சந்திக்கும் திட்டம் உள்ளதா என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தேவைப்பட்டால் ஆளுநரை சந்திப்பேன் என … Read more

13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

சென்னை உள்பட 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை உள்பட 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் … Read more

விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

முதல்வர் தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 180 வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை கலைவாணர் அரங்கத்தில் விளையாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 180 வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். அவர்களுக்கு ரூ.4.85 கோடி ஊக்கத்தொகைக்கான காசோலையை  வழங்கி, விருதுகளையும் வழங்கியுள்ளார்.

பேருந்துகளில் இந்த நாணயங்களை வாங்க மறுத்தால் நடவடிக்கை – போக்குவரத்து கழகம்

அரசு பேருந்துகளில் பயண சீட்டு வாங்க 10 ரூபாய் 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் நடத்துனர்கள் மீது நடவடிக்கை  தமிழகத்தில் பல இடங்களில் பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளது. இந்த நிலையில், வியாபாரிகள் முதல் பேருந்து நடத்துனர்கள் வரை அனைத்து தரப்பினரும் இந்த நாணயங்களை வாங்க மறுப்பதாக பொதுமக்கள் தரப்பில் புகார்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில், அரசு பேருந்துகளில் பயண சீட்டு வாங்க 10 ரூபாய் 20 ரூபாய் … Read more