இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் கைது :அதிர்ச்சியில் இங்கிலாந்து அணி!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டி  நடைபெற்றது. இதில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.இந்த வெற்றியை கொண்டாட இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் இரவு விடுதிக்கு சென்றுள்ளனர். அப்போது  பென் ஸ்டோக்ஸ் அதிகமாக மது அருந்தியதால் ரகளையில் ஈடுபட்டு ஒருவரைக் காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன்பேரில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இரவு முழுக்க சிறையில் வைத்து விசாரணை நடத்திய பிறகு விடுவித்துள்ளனர். இதனால் நான்காவது ஒரு நாள் போட்டியில்  பங்கேற்கமாட்டார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் … Read more

தீபாவளிக்கு பட்டாசுகள் வாங்க PAN card கட்டாயம் ..!

தீபாவளிக்கு  ரூ.50,000-க்கு மேல் பட்டாசுகள் கடைகளிலோ அல்லது தொழிற்சாலைகளில் வாங்கினாலோ வாடிக்கையாளர்கள் பான் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்பது அவசியமாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் புகார் கூறுகின்றனர்.

மோடி ஆட்சியில் கடும் பொருளாதார வீழ்ச்சி:பா.ஜ.க. மூத்த தலைவர் – முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா

“கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் இதனை ஒத்துக் கொள்ளும் நேர்மை ஆட்சியாளர்களுக்கு இல்லை” -இன்றைய பத்திரிக்கைகள் பேட்டியில் பா.ஜ.க. மூத்த தலைவர் – முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா.

தாபங் டெல்லியை அலறவிட்ட பாட்னா பைரேட்ஸ்…! பிரதீப் நர்வால்…

ப்ரோ கபடி லீக் ஆட்டத்தில் மோதிய தாபங் டெல்லியை 34-36 என்ற பாய்ன்ட்களில் தோற்கடித்தது பாட்னா பைரேட்ஸ் ஆட்டத்தில் வெற்றியின் நாயகனாக ஜொலித்தார் டுப்ப்கி கிங்  பிரதீப் நர்வால்.

அமீர்கான் மாதிரி முதல்ல நல்ல படத்துல நடிப்பா..,அதுக்கு அப்பறம் அரசியல பாத்துக்கலாம் அசால்ட்டுகாட்டும் கமல்

இந்தி நடிகர் அமீர்கானைப் போல நடிகர் விஜய் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார். கமலின் அரசியல் பிரவேசம் தீவிரமடைந்துள்ள நிலையில், அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் பேட்டி அளித்து வருகிறார் கமல். ஒரு பேட்டியில், விஜய் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு போட்டியாக இருப்பாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த கமல், அரசியலில் இடையூறாக இருந்தால் அதுதொடர்பான விமர்சனங்கள் தெரிவிக்கப்படும் என்றார். வெற்றி பெற்ற நடிகர்கள் நல்ல படங்களில் நடிக்க வேண்டும். இந்தி நடிகர் அமீர்கான் … Read more

பேராசிரியர் ஜெனிஃபாவை கத்தியால் குத்திய வாலிபர் ஜோதிமுருகனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஜெனிஃபாவை கத்தியால் குத்திய விரிவுரையாளரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் ஜெனிஃபா. அவரை அதே பல்கலைக்கழகத்தில் பணி புரிந்த முன்னாள் பகுதி நேர விரிவுரையாளர் ஜோதிமுருகன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து நடந்த முதல்கட்ட விசாரணையில் அவருக்கு வேலை தரவில்லை … Read more

கடைசி ஐந்து வினாடிகளில் தமிழ் தலைவாசை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற அஜய் தாக்கூர்..!

புரோ கபடி போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால் தற்போது நடந்து வரும் போட்டிகள் விறுவிறுப்புடன் உள்ளது. கடந்த போட்டியில் கடைசி ஐந்து வினாடிகளில் இரண்டு புள்ளிகள் எடுத்து ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ் நேற்று நடந்த போட்டியிலும் அதே ஐந்து வினாடி இருக்கும்போது இரண்டு புள்ளிகள் எடுத்து ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது. இன்று குஜராத் அணிக்கு எதிராக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி ஆரம்பம் … Read more

இந்திய மக்கள் வங்கி கணக்கில் ரூ.15 இலட்சம் போடுவதாக மோடி சொல்லவே இல்லையாம் அந்தர்பல்டி அடிக்கும் தமிழிசை சௌந்தர்ராஜன்

சென்னை: குடிமக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ 15 லட்சம் போடுவதாக மோடி எப்போதும் சொல்லவில்லை என்று தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள் ஒவ்வொருவரது வங்கிகணக்கிலும் ரூ 15 லட்சம் போடுவதாக மோடி வாக்குறுதி தந்தார். ஆனால் பணமதிப்பிழப்பு என்ற பெயரில் மக்களிடம் இருந்ததையும் பிடுங்கிவிட்டார் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக பா.ஜ. தலைவர் தமிழசை தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இந்த … Read more

ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்தேன்: அமைச்சர் நிலோபர் கபீல்

புதுதில்லி: அப்பல்லோ மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை பார்த்ததாக அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்துள்ளார். ‘மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை நாங்கள் பார்த்தோம். அவர் இட்லி, சட்டினி சாப்பிட்டார் என்று கூறியது பொய்; அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்’ என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கடந்த சில தினங்களுக்கு முன் கருத்துத் தெரிவித்திருந்தார். திண்டுக்கல் சீனிவாசனின் இந்தக் கருத்து தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை கிளப்பியது. அவரை தொடர்ந்து அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் … Read more

சிறுமியிடம் சேட்டை செய்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை

சென்னை: அயனாவரம் பகுதியைச் சேந்த தம்பதியினர் குமார், மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு 2 குழந்தைகள். முதல் குழந்தை மீரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தாள். இவர்கள் தங்கியுள்ள அதே கட்டிடத்தில் மற்றொரு குடும்பத்தினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் குழந்தை உள்ளது. கீதாவும், மீராவும் தோழிகள். இந்நிலையில், கீதா வீட்டிற்கு அடிக்கடி அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (55) வந்து செல்வார். கடந்த 2016ல் … Read more