அமீர்கான் மாதிரி முதல்ல நல்ல படத்துல நடிப்பா..,அதுக்கு அப்பறம் அரசியல பாத்துக்கலாம் அசால்ட்டுகாட்டும் கமல்

0
156

இந்தி நடிகர் அமீர்கானைப் போல நடிகர் விஜய் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.
கமலின் அரசியல் பிரவேசம் தீவிரமடைந்துள்ள நிலையில், அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் பேட்டி அளித்து வருகிறார் கமல். ஒரு பேட்டியில், விஜய் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு போட்டியாக இருப்பாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த கமல், அரசியலில் இடையூறாக இருந்தால் அதுதொடர்பான விமர்சனங்கள் தெரிவிக்கப்படும் என்றார். வெற்றி பெற்ற நடிகர்கள் நல்ல படங்களில் நடிக்க வேண்டும். இந்தி நடிகர் அமீர்கான் அப்படி நல்ல படங்களில் நடித்து வருகிறார். அவரைப் போலவே தம்பி விஜய்யும் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பதே தனது ஆசை என கமல் தெரிவித்துள்ளார்.
முதலில் நல்ல படங்களில் நடிங்க.. அரசியல்லாம் அப்புறமா பாத்துக்கலாம் என மறைமுகமாக விஜய்க்கு அட்வைஸ் வழங்கியுள்ளார் கமல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here