கமல் ரசிகர்கள் கொந்தளிப்பு..,,

தமிழக அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் தலை விரித்தாடுகிறது என நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் உட்பட பல அமைச்சர்கள் கமல்ஹாசனுக்கு எதிராக கடுமையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். எனவே, கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதற்கும் தமிழக அரசியல்வாதிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள கமல்ஹாசன் ரசிகர்கள், அவருக்கு ஆதரவாகவும், தமிழக அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் … Read more

ஸ்ருதியின் சின்ன வயது ஆசை…!

பொற்கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்ற ஸ்ருதியின் சின்ன வயது ஆசை, தற்போது நிறைவேறியிருக்கிறது. நாத்திகரான கமல், தன் மகள்கள் கோயிலுக்குச் செல்வதற்குத் தடை போடுவதில்லை. கமலின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன், கோயில்களுக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில், விளம்பரப் படம் ஒன்றில் நடிப்பதற்காக சண்டிகர் சென்ற ஸ்ருதி, அங்குள்ள அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். “சிறுவயதில் இருந்தே பொற்கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்பது என் ஆசை. ஆனால், அது நிறைவேறாமலேயே இருந்தது. நீண்ட நாட்கள் கழித்து … Read more

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு மோடி வாழ்த்து..,

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய பெண்கள் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா, இங்கிலாந்து இடையிலான பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி லண்டனில் இன்று(ஜூலை-23) நடந்து வருகிறது. உலகக் கோப்பையில் வெற்றி பெற இந்திய பெண்கள் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற, நமது 125 கோடி … Read more

ஈராக் அமைச்சர் இந்தியா வருகை..,

ஈராக் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் இப்ராஹிம் அல்-ஜாஃப்ரி 5 நாள் அரசுமுறைப் பயணமாக நாளை இந்தியா வருகிறார். தில்லியில் நாளை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார். இந்த பயணத்தின்போது மும்பை நகருக்கு செல்கிறார். 2016-17 ஆம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் 13 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு நடந்துள்ளது. மேலும் இருதரப்பு உறவுகள் மேம்படவும் இந்தியா-ஈராக் இடையே புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. … Read more

இளவரசி டயானாவின் ஆவணப்படம் வெளியாகிறது.,

உலகின் முக்கியப் பிரபலமாக உருவான கொஞ்ச காலத்திலேயே இவ்வுலகைவிட்டு மறைந்தவர் இளவரசி டயானா. வேல்ஸ் இளவரசர் சார்லஸின் முதலாவது மனைவி. இளவரசர் சார்லசுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து, டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார். ஐக்கிய நாடுகள் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் இவர்களது திருமண வாழ்வு தொடக்கம் முதல் மணமுறிவு ஏற்படும் வரையில் ஊடகத் துறையில் அதிகம் பேசப்பட்டார். அதுவரை இங்கிலாந்து மக்கள் பார்த்து வந்த அரச குடும்பத்து மனிதர்கள் … Read more

கண்டெய்னர்ரில் கடத்தப்பட்ட ஆட்கள் உயிர் இழந்த பரிதாபம்..,

அமெரிக்காவின் சான் ஆண்டோனியா மாகானத்தில் வால்மார்ட் வாகன நிறுத்தம் உள்ளது. அங்கு கண்டெய்னர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது, கன்டெய்னர் லாரியில் 2 பள்ளிக் குழந்தைகள் உட்பட 38 பேர் அடைக்கப்பட்டு இருந்தனர். கன்டெய்னருக்குள் இருந்தவர்கள் வால்மார்ட் ஊழியரிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளனர். சரக்கு ஏற்றும் கண்டெய்னரில் மனிதர்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த வால்மார்ட் ஊழியர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் கன்டெய்னரில் இருந்த 38 பேரை மீட்டனர். அதில், 8 பேர் … Read more

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட புத்த ஆலயம்!!!

மியான்மரில் பெருகி வந்த ஆற்று வெள்ளத்தில் புத்த ஆலயம் ஒன்று தகர்ந்து முழுகும் காட்சி தத்துருவமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. மியான்மர் என்ற பெயரில் அழைக்கப்படும் பர்மா நாட்டின் பக்கொக்கு என்ற இடத்தில் புத்த ஆலயம் ஒன்று கம்பீரமாக காட்சி அளித்து வந்தது. ஐய்ஐயார் வட்டி என்ற நதியின் கரையில் இருந்த இந்த ஆலயம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து நீரில் முழுவதுமாக மூழ்கியது. பக்தர்களின் மனதை பதை பதைக்க வைத்த இந்த காட்சி தத்துருவமாக … Read more

இந்தியாவுக்கு நவீன விமானங்களை விற்க ரஷ்யா ஆர்வம்..,

இந்திய விமானப்படையில் கடந்த 50 ஆண்டுகளாக ரஷ்யாவை சேர்ந்த மிக் ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்த விமானங்களை உற்பத்தி செய்யும் மிக் நிறுவனம், இன்னும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மிக் – 35 ரக விமானங்களை உற்பத்தி செய்துள்ளது. தற்போது இந்த விமானத்தை இந்தியாவுக்கு விற்க தயாராக உள்ளதாக கூறியுள்ளது.அந்நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் இல்யா டரசென்கோ அளித்த பேட்டி: வானில் அமெரிக்க ஜெட் விமானங்களை தோற்கடிக்கும் திறன் பெற்றது. இந்த விமானங்களை இந்தியாவிலும் … Read more

டெல்லியில் தமிழக விவசாயிகள் 8வது நாளாக போராட்டம்…!

டெல்லியில் விவசாயிகள் 8 வது நாளாக மொட்டியடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய வங்கிகளில் வாங்கிய விவசாய கடன் ரத்து, நதிகளை இணைத்தல், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற்னர். கடந்த 16ம் தேதி தொடங்கிய போராட்டம் இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மனிதர்களை ஏரில் பூட்டி உழுதல், செருப்பு, துடைப்பத்தால் அடித்துக்கொள்ளுதல் என தினம் ஒரு போராட்த்தை … Read more

இன்னைக்கு ஞாயிற்று கிழமை கோழி கறி எடுக்க போறிங்களா அப்போ இத படிங்க

மனித சமூகத்தின் புராதன வரலாற்றில் கோழிகளுக்கும் முக்கிய இடம் இருந்துள்ளது. சுமார் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் கோழிகளை வீடுகளில் வளர்த்துள்ளான், இன்று பண்ணைகளை அமைத்து மிகுந்த பராமரிப்புடன் வளர்க்கப்படுகிறது. 2003-ல் உலகில் இவற்றின் எண்ணிக்கை 24-பில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது.  இது உலகில் உள்ள எந்த ஒரு பறவையைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையாகும் பொதுவாக அவற்றின் இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. கோழிகளிலே நாட்டுக்கோழி,  பிராய்லர்கோழி, நெருப்புகோழி, வான்கோழி, நீர்க்கோழி, இப்படி பலவகைகளில் இருந்தாலும் தற்காலத்தில் மக்கள் மத்தியில் அதீத பிரசித்தி பெற்றது … Read more