இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு மோடி வாழ்த்து..,

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய பெண்கள் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா, இங்கிலாந்து இடையிலான பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி லண்டனில் இன்று(ஜூலை-23) நடந்து வருகிறது. உலகக் கோப்பையில் வெற்றி பெற இந்திய பெண்கள் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற, நமது 125 கோடி மக்களுடன் இணைந்து வாழ்த்துக்களை தெரிவிக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துளார்.

Leave a Comment