இளவரசி டயானாவின் ஆவணப்படம் வெளியாகிறது.,

உலகின் முக்கியப் பிரபலமாக உருவான கொஞ்ச காலத்திலேயே இவ்வுலகைவிட்டு மறைந்தவர் இளவரசி டயானா. வேல்ஸ் இளவரசர் சார்லஸின் முதலாவது மனைவி. இளவரசர் சார்லசுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து, டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார். ஐக்கிய நாடுகள் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் இவர்களது திருமண வாழ்வு தொடக்கம் முதல் மணமுறிவு ஏற்படும் வரையில் ஊடகத் துறையில் அதிகம் பேசப்பட்டார். அதுவரை இங்கிலாந்து மக்கள் பார்த்து வந்த அரச குடும்பத்து மனிதர்கள் வேறு. இறுக்கமான முகம். ‘நீ சாமான்யன், நாங்கள் ராஜவம்சத்தினர்..!’ என்கிற தோரணை. நிலப்பிரபுத்துவ மனோபாவம். தங்க வட்டத்துக்குள் ராஜ வாழ்க்கை. அந்தக் குடும்பத்துக்கு உள்ளே நுழையும்போதே, நான் வேறு ஜாதி என்று நிரூபித்துவிட்டவர் டயானா. பத்தொன்பது வயதில் சார்லஸைக் கைப்பிடித்து பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் நுழைந்தார். வெகு சீக்கிரம், அடித்தட்டு மக்களின் இதயத்தில் இடம்பிடித்துவிட்டார்.
இத்தகையப் பெருமைகளைக் கொண்ட இளவரசி டயானா குறித்த ஆவணப்படம், அவரது நினைவு தினம் அடுத்த மாதம் வருவதையொட்டி நாளை வெளியிடப்பட உள்ளது.

Leave a Comment