என் முதல் காதல் திருமணத்துடன் தொடர்கிறது – கன்னிகா சினேகன்.!

7 வருடத்திற்கு முன், காதலர் சினேகனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை கன்னிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பாடலாசிரியரும், மக்கள்நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளருமான சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அனைவரது நலன் கருதி மிக எளிமையாகவும், தனிமனித இடைவெளியோடும், அரசு விதிமுறைகளோடும் சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடிகரும், மக்கள் நீதி … Read more

பெண்களை கருத்தரிக்க சொந்த விந்தணுவைப் பயன்படுத்திய மருத்துவர் – ரூ.80 கோடி இழப்பீடு தர ஒப்புதல்.!

பெண்களை கருத்தரிக்க சொந்த விந்தணுவைப் பயன்படுத்திய கனடா மருத்துவர் ரூ.80 கோடி இழப்பீடு தொகையாக வழங்க ஒப்புதல். கனடிய கருவுறுதல் மருத்துவர் 80 வயதான பெர்னார்ட் நார்மன் பார்வின் , IVF எனப்படும் சிகிச்சையின் போது பெண்களை கருத்தரிக்க தனது சொந்த விந்தணுவைப் பயன்படுத்தியதாக சுமார் 200க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடுத்த நிலையில், அவர்களுக்கு இழப்பீடு தொகையாக ரூ.80 கோடி தருவதாக ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. மருத்துவரால் பாதிக்கப்பட்டவர்கள் முன்மொழியப்பட்ட ($ 13.375m) … Read more

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் இன்றும் நாளையும் 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருவள்ளூர், ராணிப்பேட்டை,வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 3 ஆம் தேதி … Read more

ஆகஸ்ட் 15 முதல் ஓணம் சிறப்பு பாரத் தர்ஷன் ரயிலை இயக்கும் இந்திய ரயில்வே

ஆகஸ்ட் 15 அன்று மதுரையில் இருந்து ஓணம் சிறப்பு பாரத் தர்ஷன் ரயிலை இந்திய ரயில்வே இயக்குகிறது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) ஆகஸ்ட் 15 அன்று மதுரையில் இருந்து ஓணம் சிறப்பு பாரத் தர்ஷன் ரயிலை இயக்குகிறது. இந்த இந்திய ரயில்வே சிறப்பு ரயில் ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 26 வரை இயக்கப்படும். 12 நாள் பயணத்திற்கான அதன் மொத்த செலவு ரூ .12,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் … Read more

“ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு இவை கட்டாயம்” – அமைச்சர் மா. சுப்பிரமணியன்..!

ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கேரளாவில் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில்,அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராய மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் 6 பேர் கேரளாவில் முகாமிட்டுள்ளனர்.மேலும்,கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வார இறுதி நாட்களில் மாநிலம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில்,கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து … Read more

மாரியம்மா கதாபாத்திரத்தில் இருந்து மீள முடியவில்லை – துஷாரா விஜயன்.!

துஷாரா விஜயன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் மாரியம்மா கதாபாத்திரத்தில் இருந்து மீள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.  இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை துஷ்ரா விஜயன் நடித்திருந்தார். இதில் துஷ்ரா விஜயன் நடித்த மாரியம்மா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மனதில் நீங்கா இடம்பிடித்திருந்தது. இந்த படம் மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார். இந்த படத்தில் தனது நடிப்பால் … Read more

ஆளும் திமுக அரசின் அதிகாரப்போக்கு… உரிமைகள் நிலைநாட்ட துணைநிற்பேன் – சீமான் உறுதி

ஆதித்தமிழ்குடியினரின் உரிமைகள் நிலைநாட்டப்பட துணைநிற்பேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்வீட். இதுதொடர்பாக சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சென்னை அரும்பாக்கத்தில் ஆளும் திமுக அரசின் அதிகாரப்போக்கினால், #SmartCity என்ற பெயரில் தொன்றுதொட்டு வாழ்ந்துவந்த வசிப்பிடத்திலிருந்து ஆதித்தமிழ்குடியினரை அப்புறப்படுத்துவதா? என்று கேள்வி எழுப்பி, அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே இக்கொடுஞ்செயலில் ஈடுபடுவதா? மண்ணின் மைந்தர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்பதா? என்று கேட்டுள்ளார். மேலும், அப்புறப்படுத்தப்பட்ட ஆதித்தமிழ்குடியினரை சந்தித்து, ஆறுதல் கூறினேன் என்றும் அவர்களின் … Read more

அண்ணாத்த படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய மீனா.!

நடிகை மீனா அண்ணாத்த திரைப்படத்தின் டப்பிங் பணியை  தொடங்கியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியின் மூலம் தெரிவித்துள்ளார்.  ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்து வருகிறார். படத்தில் குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, ஜெகபதி பாபு, சூரி, சதிஷ், போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகின்ற நவம்பர் 4 … Read more

ஊரடங்கு நீட்டிப்பு: இன்று முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி.. எங்கே தெரியுமா?

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் இன்று முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மதுபானக் கூடங்கள், கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம் என்றும் தனியார் அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்குவதற்கும் அனுமதி … Read more

சியான் 60 திரைப்படத்தின் லேட்டஸ்ட் தகவல்.! விரைவில் அப்டேட்..??

சியான் 60 திரைப்படத்தின் படப்பிடிப்பு 10 நாட்களில் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடையவுள்ளது.  நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் “சியான் 60”. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். படத்தில் நடிகை சிம்ரன், வாணிபோஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், தற்போது … Read more