சியான் 60 திரைப்படத்தின் லேட்டஸ்ட் தகவல்.! விரைவில் அப்டேட்..??

சியான் 60 திரைப்படத்தின் படப்பிடிப்பு 10 நாட்களில் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடையவுள்ளது. 

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் “சியான் 60”. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். படத்தில் நடிகை சிம்ரன், வாணிபோஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது இந்த திரைப்படம் குறித்து கிடைத்த தகவல் என்னவென்றால், படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்னும் 10 நாட்களில் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடையவுள்ளது. அதன் பிறகு தொடர்ந்து சியான் 60 படத்தின் அப்டேட் வரிசையாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை முடித்து விட்டு நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவுள்ளார். துருவ் விக்ரம் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.