TOKYO2020:குத்துச்சண்டை காலிறுதியில் உலகின் நம்பர் 1 வீரரிடம் போராடி தோற்ற இந்தியாவின் சதீஸ்குமார் ..!

டோக்கியோ ஒலிம்பிக்கில் சூப்பர் ஹெவிவெயிட் பிரிவின் குத்துச்சண்டை காலிறுதியில் இந்தியாவின் சதீஷ் குமார், உஸ்பெகிஸ்தான் வீரரிடம் தோல்வியுற்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை சூப்பர் ஹெவி வெயிட் போட்டியின் 91 கிலோஎடை பிரிவின், 16 வது சுற்று போட்டிகள் முன்னதாக நடைபெற்றன.இப்போட்டியில் இந்திய வீரர் சதீஷ் குமார் ஜமைக்காவின் ரிகார்டோ பிரௌனை 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

உலகின் நம்பர் 1 வீரர்:

இந்நிலையில்,இன்று நடைபெற்ற காலிறுதியின் 91 கிலோ எடை பிரிவில், உலகின் நம்பர் 1 வீரரான உஸ்பெகிஸ்தானின் பகோதிர் ஜாலோலோவை,இந்தியாவின் சதீஸ்குமார் எதிர்கொண்டார்.

அதன்படி,இப்போட்டியில் முதல் ரவுண்டில் இருந்து சதீஷ் குமார் சற்று சிறப்பாக விளையாடி மூன்று ரவுண்டுகளுக்கு பிறகு குமாருக்கு 27 புள்ளிகள் பெற்றார்.இதனையடுத்து,பகோதிர் 30 புள்ளிகள் பெற்று முன்னிலை வகித்தார்.

போட்டியின் முடிவில் சதீஷ்குமார் 0-5 என்ற கணக்கில் பகோதிர் ஜலோலோவிடம் போராடி தோல்வியடைந்ததை அடுத்து இந்தியாவின் ஆண்கள் குத்துச்சண்டை போட்டி இன்று முடிவுக்கு வந்தது. இதனால், ஒலிம்பிக்கில் இப்போட்டியில் பதக்க வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது.