2 ஆண்டுகள் அரசு பங்களாவை காலி செய்ய அவகாசம் வேண்டுமென உ.பி முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கோரிக்கை!

உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்,அரசு பங்களாவை காலி செய்ய 2 ஆண்டுகள் அவகாசம் வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் அந்த மாநில அரசுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், இசட் பிளஸ் பாதுகாப்பில் இருப்பதால் அதற்கு ஏற்ற வீடு லக்னோ நகரில் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எனவே அவகாசம் தருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர்களுக்கு தனி பங்களா, பணியாளர்கள், தொலைபேசி இணைப்பு என அரசு செலவில் அனைத்தும் வழங்கும் சட்டம் அகிலேஷ் யாதவ் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தில் அந்த சட்டத்தை ரத்து செய்தது. இதையடுத்து அரசு பங்களாவை காலி செய்ய உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டதை அடுத்து மாயாவதி 15 கோடி மதிப்புள்ள பங்களாவுக்கு இடம் மாற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment