100 விழுக்காடு எம் சாண்ட் பயன்பாட்டை உயர்த்துவதே தமிழக அரசின் நோக்கம்!முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி ,தமிழ்நாட்டில் எம்.சாண்ட் ((M-Sand)) பயன்பாட்டை 100 விழுக்காடு அளவிற்கு கொண்டு வருவதே, அரசின் நோக்கம் என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர்கள் பதிலுரை முடிந்த பிறகு, கோயம்புத்தூர் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், தமிழ்நாட்டில் எத்தனை எம்.சாண்ட் ஆலைகள் உள்ளன? என்றும், எத்தனை பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது? என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, தமிழ்நாட்டில், மணல் அத்தியாவசிய தேவையாக உள்ளது என்றும், எம்.சாண்ட் பயன்படுத்துவது தொடர்பாக பொதுமக்களுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதன் பயனாக கடந்தாண்டு 10 விழுக்காடாக இருந்த எம்.சாண்ட் பயன்பாட்டின் அளவு, இந்தாண்டு 40 விழுக்காடாக உயர்ந்துள்ளாதாக முதலமைச்சர் கூறினார். இதுதொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, வரும் ஆண்டுகளில் எம்.சாண்ட் பயன்பாட்டினை 100 விழுக்காடாக உயர்த்துவதே தமிழ்நாடு அரசின் நோக்கம் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

மேலும், தமிழ்நாட்டில் 24 எம்.சாண்ட் ஆலைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு அரசு விதித்துள்ள விதிகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் எம்.சாண்ட் ஆலை அமைப்பதற்கான உரிமம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

இது தவிர வெளிநாட்டு மணலை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளிலும் தமிழ்நாடு அரசு தீவிரமாக உள்ளதாகவும், அது தொடர்பான டெண்டரை இறுதி செய்யும் பணி பரிசீலனையில் உள்ளது என்றும் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment