“ஸ்டெர்லைட் மீண்டும் திறப்பு” திமுக தலைவர் ஸ்டாலின்.

மத்திய பாஜக அரசும் – மாநில அதிமுக அரசும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு கைகோர்த்து செயல்படுவது கடும் கண்டனத்துக்குரியது எனவும் மத்திய அரசின் “நீர் ஆய்வு” அறிக்கையை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக வழக்குத் தொடர வேண்டும் என திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

“தூத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமில்லை” என்று மத்திய நீர்வளத்துறை ஆய்வு அறிக்கையை வெளியிட்டு இருப்பது கடும் கண்டனத்துக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.

Image result for ஸ்டாலின்

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு, அது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தனியார் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக அந்த ஆலையை திறப்பதற்கு துணை போகும் வகையில், இப்படியொரு ஆய்வை மேற்கொண்டிருப்பது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும் என சாடியுள்ளார்.

மத்திய நிலத்தடி நீர் வாரியம் தூத்துக்குடி பகுதிகளில் நீரினை ஆய்வு செய்வது உளவுத்துறை மூலமாக அறிந்திருந்தும், அதை வேடிக்கை பார்த்து விட்டு இப்போது மத்திய அரசின் அறிக்கை வெளிவந்த பிறகு மாநில தலைமைச் செயலாளர் பெயரில் அந்த அறிக்கையை எதிர்க்க வைத்திருப்பது அ.தி.மு.க அரசுக்கும் – மத்திய பா.ஜ.க. அரசுக்கும் தனியார் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதில், உள்நோக்கம் இருந்திருப்பது தெரியவந்துள்ளது என்றார்.

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மாநில அரசின் பிரதிநிதிகளே இல்லாமல், ஒரு கமிட்டியை, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைப்பதையும் கைகட்டி நின்று வேடிக்கை பார்த்தது அ.தி.மு.க அரசு என குற்றம் சாடியுள்ளார். இப்போது மத்திய அரசு நடத்திய “நீர் ஆய்வுக்கும்” உறுதுணையாக இருந்து விட்டு, திடீரென்று தலைமைச் செயலாளர் மூலமாக “எதிர்ப்புக் கடிதம்” எழுத வைத்திருப்பது, தூத்துக்குடி மக்களை மட்டுமல்ல – தமிழக மக்களை ஏமாற்றித் திசை திருப்பும் வேலை. மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும் – மாநில அ.தி.மு.க அரசும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு கைகோர்த்து “கடமை உணர்வுடன்” செயல்படுகின்றன என்பது உறுதியாகிறது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  “நீர் ஆய்வு” அறிக்கையை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். அ.தி.மு.க அரசு இப்படி அதிகாரிகள் மூலம் கடிதம் எழுதி எதிர்ப்புத் தெரிவிப்பதை விடுத்து, உடனடியாக இந்த ஆய்வு அறிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடை பெற்றிட வேண்டும் என்றும் அந்த அறிக்கையை அமைச்சரவைக் கூட்டத்தில் நிராகரித்திட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

DINASUVADU

author avatar
Dinasuvadu desk

Leave a Comment