வேதாந்தா ஸ்டெர்லைட்_டுக்கு எச்சரிக்கை….தூத்துக்குடியில் துறைமுக தொழிலாளர்கள் ஆவேசம்…!!

தீபாவளிக்கு ஸ்டெர்லைட் கொடுத்த இனிப்புகளை கீழே கொட்டி துறைமுக தொழிலாளர்கள் ஆவேசமிக்க போராட்டம் நடத்தினர்…

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 100 நாட்களாக மக்கள் போராட்டம் நடத்தி கடந்த மே 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதில் காவல்துறை தூப்பாக்கிசூடு நடத்தியதில்  13 கொல்லப்பட்டு , தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது.இந்நிலையில் பசுமைத்தீர்ப்பாயம் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு , தற்போது தருண் அகர்வால் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை எப்படியாவது திறந்துவிட வேண்டுமென்று தினம்தினம் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது.ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் விசாரணை மேற்கொள்ளும் போது பணம் கொடுத்து தங்களுக்கு சாதகமாக வெளியூர் ஆட்களை அழைத்து வந்து மனு அளித்தது.ஸ்டெர்லைட் பெயரிலில் கிராமம் கிராமமாக பணம் கொடுத்து தன்னுடைய பண சாம்ராஜ்யத்தால் எதையும் சாதித்து விடலாம் என்று திரிகிறது.ஆனால் ஸ்டெர்லைட்டின் ஒவ்வொரு முயற்சியையும் மக்கள் முறியடிக்கின்றனர்.

https://www.facebook.com/rusel.retnam.5/videos/1561133940699379/

இந்நிலையில் இன்று தூத்துக்குடி துறைமுகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்தாக இனிப்பு மிட்டாய் பாக்ஸ் வழங்கியது.ஆனால் அங்கே உள்ள துறைமுக தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தோடு  ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் துறைமுக தொழிலாளர்கள் சங்க மாநில செயலாளர் ரசல் கண்டன உரை ஆற்றினார்.ஏராளமான ஊழியர்கள் பங்கேற்று கண்டன கோஷங்கள் எழுப்பியதோடு ஸ்டெர்லைட் நிறுவனம் வழங்கிய இனிப்பை கீழே கொட்டி வேதாந்தா நிறுவனத்தை எச்சரித்தனர்.

https://www.facebook.com/rusel.retnam.5/videos/1561133217366118/

தொழிலாளி வர்க்கம் தீபாவளி போனஸ் என்றதும் நம்மிடம் சரணடைந்து விடும் என்று கனவில் மிதந்து கொண்டு இருந்த கார்ப்ரேட் வேதாந்தாவின் கனவு கலைந்து போக செய்த துறைமுக தொழிலாளர்களின் போராட்டத்தை தூத்துக்குடி மக்கள் அனைவரும் பாராட்டினர்.

dinasuvadu.com 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment